ஓவர் நைட்ல வேர்ல்ட் பேமஸான ரெஹானா..! இதுதாங்க அரசியல்வாதிகளை மிஞ்சின ஸ்டண்ட்...!!!
பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என் உச்சநீதிமன்றம் என்று தீர்ப்பு கொடுத்ததோ அன்றே ஆரம்பித்து விட்டது பெரும் தலைவலி.... தீர்ப்பு என்பது பிரச்சனைக்கு தீர்வா இருக்க வேண்டுமே தவிர தீர்ப்பே பிரச்சனையா இருக்கக்கூடாது என்பது தான் அனைவரின் கருத்தாக உள்ளது.
பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என் உச்சநீதிமன்றம் என்று தீர்ப்பு கொடுத்ததோ அன்றே ஆரம்பித்து விட்டது பெரும் தலைவலி.... தீர்ப்பு என்பது பிரச்சனைக்கு தீர்வா இருக்க வேண்டுமே தவிர தீர்ப்பே பிரச்சனையா இருக்கக்கூடாது என்பது தான் அனைவரின் கருத்தாக உள்ளது. சபரி மலைக்கு சென்றே தீருவேன் என பெரும் எதிர்ப்புக்கு நடுவில் மாதவி என்ற பெண் மலை ஏற முயன்றதும், பக்தகோடிகள் அவர் காலிலே விழுந்தும் கெஞ்சினர் சபரி மலைக்கு வர வேண்டாம் என்று..... ஒரு கட்டத்தில் மனம் மாறிய அவர் எப்படியோ பாதி வழியில் திரும்பி விட்டார்.
இந்த நிலையில் தன்னை எப்படியாவது பிரபலம் செய்துக்கொள்ள வேண்டும் என காத்திருந்த மாடல் ரெஹானா அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக சில வற்றில் மட்டும் தலை காண்பித்து வந்தார். அவருடைய எந்த பாணியும் எடுபடாமல் போகவே, கடைசியில் ஆடை எங்கே உள்ளது என கண் விரித்து தேடும் அளவிற்கு தன் உடலில் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் போர்த்திக்கொண்டு மாடல் மாடலாக போட்டோ வெளியிட்டு இருந்தார்....
.
அப்படியும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலம் அடையாத மாடல் ரெஹானா பாத்திமா வேறு என்னடா வாய்ப்பு வரும் என காத்திருந்த சமயத்தில் தான், கோடான கோடி பக்தர்களின் பக்தியின் உச்சமாக திகழும் ஐயப்பன் கோவில் விஷயம். நேற்று மாதவி சென்றதால், அனைத்து ஊடகமும் அவர் மீது பட்டது. இதனை புரிந்துக்கொண்ட மாடல் ரெஹானா பாத்திமா, இன்று சபரிமலைக்கு சென்றார். வழி நெடுகிலும் அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தலையில் இருமுடி வைத்துக்கொண்டு செல்வது போல, சிரித்துக் கொண்டே சென்று, இன்னொரு பக்கம் தர்பூசனியை கையில் வைத்துக்கொண்டு அதனை ரசித்து உண்டவாறே கூலாக செல்லும் காட்சி பக்தர்களின் மனதை பெரிதும் புண்படுத்தி உள்ளது என்று பக்தர்கள் கூறுவதை பார்க்க முடிகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, ஒரு முதல்வருக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ அவர்களது வருகையின் போது பாதுகாப்பிற்காக ஆயிரம் போலீசாராவது பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால் இந்த பாத்திமாவின் சுய விளம்பரத்திற்காக செய்த இத்தகைய செயலால் ஆயிரம் போலீசார் மத்தியில் இன்று பாத்திமா சென்று உள்ளார் என்றால் பாருங்களேன்.
ஒரு அரசியல்வாதி மக்கள் மத்தியில் பரீட்சயம் ஆவதற்கு, அவர் செய்யும் நல்ல காரியங்கள் மக்களுக்கான நல்ல திட்டங்கள் என்று அனைத்தும் செய்தால் தான் மக்களால் கவனிக்கப்படுவார்கள். அதற்கு அவர் முதலில் ஒரு எம்எல்ஏ, மினிஸ்டர் என பதவியில் இருக்க வேண்டும் அல்லது தனி அமைப்போ அல்லது தனி கட்சியாவது தொடங்கி இருக்க வேண்டும்.
இதெல்லாம் ஒன்றுமே இல்லாமல், அரை குறை ஆடையுடன் அனைத்தையும் வெளி உலகிற்கு ஒபனாக காண்பித்த இந்த மாடல், ஓவர் நைட்ல வெர்ல்ட் பேமஸ் ஆகிட்டாங்க என்றால் பாருங்களேன்..... ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் அல்லவா..? அதற்கு ஏற்றவாறு யார் இந்த ரெஹானா பாத்திமா என்று சமூக வலைத்தளம் முதல் அவரை பற்றிய செய்தி வரை தீர ஆராய்ந்தால் அவர் வேறு மதத்தை சார்ந்தவர் என்பது சமூக வலைத்தளத்தில் கொடுக்கப்பட்ட கருத்து பதிவுகள் தெரிவிக்கிறது. ஓவர் நைட்ல வெர்ல்ட் பேமஸான ரெஹானாவின் இந்த செயல், அரசியல்வாதிகளை மிஞ்சின ஸ்டண்ட்டா பார்க்கப்படுகிறது.