சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் சரண கோஷம் போட போலீசார் அதிரடியாக தடை விதித்துள்ளனர். இதனால் அரஜாகத்தின் உச்சத்துக்கே கேரளா அரசு சென்றுக்கொண்டிருக்கிறது என பக்தர்கள் கொந்தளிக்கின்றனர். இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. ஆனால் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 529 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் கார்த்திகை மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுக்கள் வரும் ஜனவரி 22-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. மேலும் சபரிமலை போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். ஆகையால் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் முதல்வரின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. 

இந்நிலையில் சபரிமலையில் காவல்துறையின் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பக்தர்கள் போராட்டத்தின் போது சரணம் ஐயப்பா என்ற கோஷம் போடுவதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும், சாமி தரிசனம் செய்வதற்கு 6 மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்துள்ளனர்.

 

அதற்குள் திரும்பிவிட வேண்டும். நிலக்கல் வரும் ஐயப்ப பக்தர்களிடம், போலீசார் ஒரு நோட்டிஸை வழங்கி வருகின்றனர். அதில் கோயில் வளாகத்தில் பக்தர்கள் குழுவாக நிற்கவோ, அமரவோ கூடாது. ஐயப்ப சரண கோஷங்களை இடக்கூடாது. செய்தி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது. மணிநேரத்துக்கு மேல் கோயில் வளாகத்தில்இருக்கக்கூடாது. மேற்கண்டவற்றை பின்பற்றாவிட்டால், உங்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் பக்தர்களிடேயே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.