Asianet News TamilAsianet News Tamil

சபரிமலையில் தொடர்ந்து அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 8-ந்தேதி வரை முன்பதிவு நிறைவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மரகவிளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து நாளுக்கு நாள் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

Sabarimala crowd mess exposes lack of preparedness
Author
First Published Jan 2, 2023, 11:56 AM IST

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைகள் நிறைவு பெற்று கடந்த மாதம் 27ம் தேதி நடை சாத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அன்றைய தினம் மட்டுமே சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Vaikuntha Ekadashi 2023: ஸ்ரீரங்கம், திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு; பக்தர்கள் பரவசம்

இந்த ஆண்டு இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி நாள் ஒன்றுக்கு சுமார் 90 ஆயிரம் பக்தர்கள் இணையதளம் வாயிகலாக பதிவு செய்யப்பட்டு, கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும் வெளியூர்களில் இருந்து முன்பதிவு செய்யாமலும் சில பக்தர்கள் வருகின்றனர். அவர்களின் வசதிக்காக உடனடி முன்பதிவு முறையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு

அதன்படி ஏற்கனவே முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் தரிசித்த பின்னர் உடனடி முன்பதிவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர். புகழ் பெற்ற மகர விளக்கு பூஜை வருகின்ற 14ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து வருகின்ற 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசிக்கலாம் என்ற அடிப்படையில் முன்பதிவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் வருகின்ற 8ம் தேதி வரை அனைத்து நாட்களிலும் இந்த 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்து விட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios