உக்ரைனில் நிகழந்தப்படும் வெடிக்குண்டு தாக்குதல் தான் இந்திய மாணவர்களை மீட்பதில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 13 ஆயிரம் பேர் தாயகம் திரும்பியுள்ளனர். 

உக்ரைனில் நிகழந்தப்படும் வெடிக்குண்டு தாக்குதல் தான் இந்திய மாணவர்களை மீட்பதில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 13 ஆயிரம் பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.
இதுக்குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், உகரைனில் இன்னும் எத்தனை பேர் உள்ளனர் என்பதை ஆராய்ந்து வருகிறோம் . மேலும் அங்கிருந்து இன்னும் பதிவு செய்யாமல் இருப்பவர்களை தூதரகம் தொடர்புகொள்ளும். இதனிடயே கடந்த 24 மணி நேரத்தில் 15 விமானங்கள் இந்தியா வந்துள்ளன. இதில் ஏறத்தாழ 2,900 பேர் வந்துள்ளனர். அதே போன்று, அடுத்த 24 மணி நேரத்தில் 13 விமானங்கள் இயக்கப்பட உள்ளன என்று தெரிவித்தார்.

மேலும் அடுத்த சில மணி நேரங்களில் கார்கீவ் மற்றும் பிசோசின் நகரங்களிலிருந்து இந்தியர்கள் அனைவரையும் வெளியேற்றி விட முடியும் என்றும் பிசோசின் அருகே இருந்து 298 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். எனவே இந்த இரு நகரங்களிலிருந்தும் மீட்புப் பணி இன்றுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம் என்று விளக்கினார்.

மேலும் படிக்க: Russia Ukraine War: இந்திய மாணவர்கள் உயிரை பணயம் வைத்து வெளியேற வேண்டாம்..எச்சரித்த இந்திய வெளியுறவுத்துறை..

உக்ரைனின் வடக்கு எல்லையில் உள்ள சுமியில் தான் தற்போது முழு கவனமும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.மேலும் அப்பகுதியில் போர் தாக்குதல் நடைபெற்று வருவதால் அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும் போக்குவரத்து குறைபாடு காரணமாகவும் அங்குள்ளவர்களை மீட்டு, அண்டை நாடுகளுக்கு கொண்டுவருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளிடையும் போர் நிறுத்தம் குறித்து இந்தியா சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. சுமியில் தற்போதைக்கு, பதற்றம் நிலவி வருவதால், அப்பகுதியில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் விரைவில் அப்பகுதியில் போர் நிறுத்தம் நிகழும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: Russia Ukraine War: போரை திசை திருப்ப முயற்சி..உக்ரைன் தான் தூண்டிவிடுகிறது..ரஷ்யா தடாலடி..

இந்திய மாணவர்கள் பெரும்பாலும் பாதுகாப்பாக , கல்வி நிறுவனங்களின் வளாகங்களில் தங்கி இருப்பதாக கூறினார். மேலும் நமது குழுக்கள் இப்போது உக்ரைனின் கிழக்கு பகுதி நோக்கி நகரவுள்ளதாகவும் வெடிக்குண்டு தாக்குதல் தான் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இதுவரை சுமார் 13 ஆயிரம் பேர் இந்தியா திரும்பிவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், கார்கிவ் நகரில் இருந்து வெளிநாட்டு மாணவர்களை மீட்க தயாராக இருந்தும், அதனை உக்ரைன் ராணுவம் தடுக்கிறது என்று ரஷ்யா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மோதலை தூண்டிவிடப்பார்க்கிறார் என்று ரஷ்ய அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தாலும் தங்கள் நாட்டை தனிமைப்படுத்த முடியாது என்று ரஷ்யா தெரித்துவித்துள்ளது.