முதலமைச்சர் பற்றி சமூக வலை தளம் ஒன்றில் தவறாக குறிப்பிட்டிருந்த தகவலை 'வாட்ஸ்-ஆப்' குரூப்பில் உடன் பணியாற்றியவர்களுடன் பகிர்ந்த பெண் போலீஸ் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி நடக்கிறது. கடந்த 1964ல் கொலை வழக்கு ஒன்றில், முதல்வர் பிரானாயி விஜயன் மீது, குற்றவாளி என சமூக வலை தளம் ஒன்றில் தகவல் வெளியானது.

இத்தகவலை தொடுபுழா காவல் நிலையத்தில், போலீசாக வேலை பார்க்கும் மஞ்சு, 'தொடுபுழா காவல்' எனும் 'வாட்ஸ்-அப்'பில் உள்ள குழுவில் பகிர்ந்து கொண்டார்.'தொடுபுழா காவல்' எனும் 'வாட்ஸ் ஆப்' குழு, தொடுபுழா நிலையத்தில் பணியாற்றும் போலீசாரின் பணி தொடர்பான தகவல்களை பரிமாறி கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.

ஆனால், இந்த குழுவுக்கு,இந்த தவறான தகவல்களை மஞ்சு பகிர்ந்து கொண்டார். இது குறித்து தொடுபுழா இன்பெக்டர் ஸ்ரீமோன் விசாரித்து, எஸ்.பி.,ஜார்ஜிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.அதன்படி மஞ்சுவை பணியில் இருந்து எஸ்.பி., 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.