சத்தீஸ்கரில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கொண்டகன் பகுதியின் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்துக் கொண்டிருந்த காரின் மீது திடீரென மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். 

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து லாரி ஓட்டுநரையும்  கைது செய்துள்ளனர்.

 

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25000 வழங்குவதாகவும், மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனவும் கொண்டகன் பகுதியின் மாவட்ட ஆட்சியர் தெகாம் தெரிவித்துள்ளார்.