ஆர்.எஸ்.எஸ்-ம் இந்தியாவும் ஒன்றுதான். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுவதைத்தான் நாங்களும் கூறுகிறோம் என்று ஆர்எஸ்எஸ் செயல் தலைவர்களில் ஒருவரான கிருஷ்ண கோபால் தெரிவித்துள்ளார்

ஐ.நா.வில் நடக்கும் 74-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்றுப் பேசினார். அவருடைய பேச்சில் ஆர்எஸ்எஸ் அமைப்பையும், பிரதமர்மோடியையும் இந்தியாவையும் கடுமையாக தாக்கிப் பேசினார். இந்தியாவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒன்று பேசியிருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செயல் தலைவர்களில் ஒருவரான கிருஷ்ண கோபால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் “ இந்தியாவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒன்றுதான், இம்ரான் கான் கூற்று சரிதான். உலகமும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை அப்படித்தான் பார்க்க வேண்டும் என்று விரும்பினோம் இம்ரான் கான் பேச்சு இதற்கு உதவியுள்ளது.

காஷ்மீருக்காக ஆதரவாகப் பேசி இம்ரான் கான் ஆர்.எஸ்.எஸ். பெயரைப் பரப்புகிறார். இந்தியாவில்தான் ஆர்.எஸ்.எஸ்.  உள்ளது, இந்தியாவுக்காக இருக்கிறது. எங்களுக்கு உலகத்தில் வேறு எங்கும் கிளைகள் கிடையாது. பாகிஸ்தான் எங்கள் மீது ஏன் கோபப்பட வேண்டும். அதாவது சங்கத்தின் மீது கோபம் காட்டினால் அது இந்தியாவுக்கு எதிரான கோபமே என்று பொருள். ஆர்.எஸ்.எஸ்-ம் இந்தியாவும் இப்போது ஒன்றுதான்.

இந்தியாவும் ஆர்.எஸ்.எஸ்-ம் ஒன்றுதான் என உலகம் பார்க்க வேண்டும் என்று விரும்பினோம் இதனை இம்ரான் எங்களுக்காக பரப்புகிறார். தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிரவாதத்தை எதிர்க்கும்போது, அதை ஆர்எஸ்எஸ் இயக்கும் என்பதை உணர்ந்துவிட்டனர். இம்ரான் கான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தாக்கி பேசுவதால்,எதுவும் செய்யாமலேயே ஆர்.எஸ்.எஸ்.க்கு நிறைய புகழ் சேருகிறது, இதனை நிறுத்தி விடாதீர்கள்”என்று தெரிவித்தார்.