Rs. 8000 crore non profit revenue discovery in the central government information

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு மார்ச் மாதம்வரை ரூ. 7 ஆயிரத்து 961 கோடி கருப்புபணத்தை வருமான வரித் துறையினர் கண்டுபிடித்துள்ளனர் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் அளித்த பதிலில் கூறியதாவது-

மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்ட வந்ததற்கு பின், கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்தஆண்டு மார்ச் மாதம் வரை, ஏறக்குறைய 900 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதில் ரூ.900 கோடிக்கு சொத்துக்கள், கணக்கில் வராத ரூ. 7 ஆயிரத்து 961 கோடி கருப்பு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவண அறிக்கையின் விவரங்கள் படி, ரூபாய்நோட்டு தடைக்குப் பின், ரூ.18.70 கோடி கள்ளநோட்டுகள் இந்த ஆண்டு நவம்பர் 30-ந்தேதி வரை போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.15.70 கோடியாக மட்டுமே இருந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.