வருமான வரி பிடித்தம் திரும்ப செலுத்தபட்டதன் காரணமாக 14 லட்சம் வரி செலுத்துபவர்கள் பயனடைந்துள்ளனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி என பிரதமர் மோடி நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில், ரூ.20 லட்சம் கோடியில் என்னென்ன அறிவிப்பு மற்றும் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில், சிறு, குறு தொழில்களுக்கு பிணையின்றி ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு கடனுதவி வழங்கப்படும்.  இந்த திட்டத்தின் கீழ் சிறு, குறு நிறுவனங்கள் அக்டோபர் 31ம் தேதி வரை கடன் உதவி பெறலாம். இந்த 3 லட்சம் கோடி கடனுதவி திட்டத்தின் மூலம் சுமார் 45 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பலனடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.100 கோடி அளவுக்கு வியாபாரம் செய்யும் சிறு,குறு நிறுவனங்களுக்கு, ரூ.25 கோடி அளவுக்கு மட்டுமே கடன் நிலுவையில் இருக்கும்பட்சத்தில் கூடுதலாக இந்த கடன் உதவியைப் பெறலாம். புதிய கடன் வசதியைப் பெற சொத்துப் பத்திரங்கள் போன்ற எந்த பிணையும் தரப்பட வேண்டாம். 8 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி, மக்களுக்கு திரும்ப தரப்பட்டுள்ளது.  வருமான வரி பிடித்தம் திரும்ப செலுத்தபட்டதன் காரணமாக 14 லட்சம் வரி செலுத்துபவர்கள் பயனடைந்துள்ளனர். 69 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 71,700 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் பல்வேறு மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  கூறியுள்ளார்.