Robber Naduram friends 3 persons arrsted

நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த 3 பேரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை. கொளத்தூர் அருகே நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை பிடிக்கச் சென்றபோது பெரியபாண்டியன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

பெரியபாண்டியை சுட்டது யார்? என்பது குறித்த மர்மம் நீடித்துக்கொண்டே வந்தது. இந்த நிலையில், ராஜஸ்தான் போலீசார் நடத்திய விசாரணையில் பெரியபாண்டியன் உடலில் இருந்த குண்டு, முனிசேகர் துப்பாக்கியில் இருந்தது தான் எனவும் முனிசேகர் தவறுதலாக சுட்டதால் தான் பெரியபாண்டி உயிரிழந்ததாகவும் ராஜஸ்தான் போலீஸ் தகவல் தெரிவித்திருந்தது. 

இதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் மற்றும் உறவினர்கள் சிலரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில் ராஜஸ்தான் போலீஸ் கூறியதை சென்னை போலீஸ் உறுதி செய்துள்ளது. அதாவது, மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை சுட்டது முனிசேகர்தான் எனவும் கொள்ளையன் நாதுராமை பிடிக்க முனிசேகர் சுட்டபோது குறிதவறி பெரிய பாண்டியன் உயிரிழந்துள்ளார் எனவும் சென்னை போலீஸ் உறுதிபட நேற்று தெரிவித்தது.

இந்த நிலையில், கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 3 பேர், ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 3 பேரையும் ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் ராஜஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.