கடந்த 13-ம் தேதி புதுமண தம்பதியினர் இருவரும் மணமகளின் வீட்டிற்கு   இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பின்னால் வேகமாக வந்த டிராக்டர் இருசக்கர வாகனம் மீது மோதியது. 

திருமணமான மூன்றே நாளில் புதுமண தம்பதி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆந்திர மாநிலம் இச்சாபுரத்தை சேர்ந்தவர் வேணு (26). இவருக்கும் ஒடிசா மாநிலம், பரம்பூர் கிராமத்தை சேர்ந்த பிரவல்லிகா (23) என்கிற பெண்ணுக்கும் கடந்த 10-ம் தேதி பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கடந்த 13-ம் தேதி புதுமண தம்பதியினர் இருவரும் மணமகளின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பின்னால் வேகமாக வந்த டிராக்டர் இருசக்கர வாகனம் மீது மோதியது. 

இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், சிகிச்சை பலனின்றி முதலில் வேணு உயிரிழந்த நிலையில், சிறிது நேரத்தில் மணமகள் பிரவல்லிகாவும் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி வெறும் 3 நாட்களில் புதுமண தம்பதி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.