- Home
- இந்தியா
- Last Railway Station: இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் இதுதான்.. இங்கிருந்து வேறொரு நாடு தொடங்குது
Last Railway Station: இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் இதுதான்.. இங்கிருந்து வேறொரு நாடு தொடங்குது
Last Railway Station: இந்தியாவில் ஒரு ரயில் நிலையம் இருக்கிறது. அதைத் தாண்டினால் அடுத்த சில அடிகளிலேயே வேறு ஒரு நாட்டின் எல்லை தொடங்கிவிடும். பயணிகள் அதிகம் வராத இந்த மர்மமான நிலையம் எது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
13

Image Credit : AI
இந்தியாவின் கடைசி ரயில்வே ஸ்டேஷன்
இந்தியன் ரயில்வே நம் நாட்டின் முக்கிய போக்குவரத்து ஆகும். நூற்றுக்கணக்கான ரயில் நிலையங்கள் இங்கே உள்ளன. ஆனால், சிங்கபாத் நிலையம் மிகவும் முக்கியமானது. காரணம், இதுதான் இந்தியாவின் எல்லையில் உள்ள கடைசி நிலையம். இங்கிருந்து சில அடிகள் நடந்தால், பங்களாதேஷ் நாட்டின் எல்லைக்குள் நுழைந்துவிடலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
23
Image Credit : Getty
பயணிகள் இல்லாத ஸ்டேஷன்
இந்த ஸ்டேஷன் பார்ப்பதற்கு ரொம்பவே விசித்திரமாக இருக்கும். மற்ற ரயில் நிலையங்கள் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக இருக்கும். ஆனால், சிங்கபாத் ஸ்டேஷன் எப்போதும் அமைதியாக, ஆள் அரவமற்று காணப்படும். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, இங்கு பயணிகள் ரயில் சேவையை முழுமையாக நிறுத்திவிட்டார்கள். அதனால், எந்தவொரு பயணிகள் ரயிலும் இங்கு நிற்பதில்லை.
மகாலட்சுமி ராஜயோகம்! இந்த 2 ராசிக்காரர்களுக்கு பணம், அதிர்ஷ்டம் குவியும்.. லிஸ்ட் உள்ளே
33
Image Credit : Getty
இந்த ஸ்டேஷன் சிறப்பு என்ன?
சிங்கபாத் ரயில் நிலையத்தின் ஸ்பெஷாலிட்டியே, இங்கு இன்னும் பிரிட்டிஷ் காலத்து உபகரணங்களை பயன்படுத்துவதுதான். பழைய சிக்னல் கியர்கள், தடுப்புகள் என எல்லாமே அந்தக் காலத்தவை. ரயில்வே ஊழியர்கள் இங்கு வேலை செய்தாலும், பயணிகளுக்கான டிக்கெட் கவுன்ட்டர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டுவிட்டன. ஆனாலும், சரக்கு ரயில் போக்குவரத்துக்காக இந்த நிலையம் இன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
Latest Videos

