ராஜஸ்தானில் வேனும் - காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அம்மாவட்டத்தின் பலிசர் என்ற கிராம பகுதியை வேன் வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாறாக ஓடி மறுபுறம் வந்துகொண்டிருந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 8 ஆண்கள், 6 பெண்கள் உட்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தவறான திசையில் பேருந்து வந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார்.