பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மீதான நிலமோசடி புகாரையடுத்து 22 இடங்களில் வருமானவரி சோதனை நடத்தி வருகிறது.

சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீடுகள், டெல்லி உள்ளிட்ட அவருக்கு சொந்தமான மொத்தம் 16 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே ரூ.1000 கோடிக்கு பினாமி பெயரில் நிலமோசடி செய்ததாக லாலு மீது பா.ஜ.க குற்றம் சாட்டியிருந்தது.

ஆதாரமிருந்தால் நீதிமன்றத்தை அணுகலாம் என நிதிஷ்குமார் கூறி இருந்தார்.

இந்நிலையில் பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத்துக்கு சொந்தமான டெல்லி மற்றும் குர்கான் உட்பட 22 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.  

மேலும் லாலுபிரசாத் மகன் இல்லத்திலும் வருமான வரி சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.