மத்திய அரசு கொண்டுவந்த இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு தடை விவகாரதாதால், எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதி கடந்த 2016-17 நிதியாண்டில் 4.35சதவீதம் சரிந்துள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகம் ஆகியவற்றை சந்தையில் விற்பனை செய்யமத்தியஅரசு தடை விதித்தது. இதற்கு நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், அரசின் உத்தரவை தடை செய்தது. மேலும், உச்ச நீதிமன்றமும் அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மத்திய அரசின் இந்த உத்தரவால், எருமை மாட்டிறைச்சி விற்பனை திடீரென சரிந்துள்ளது.

இது குறித்து மாநிலங்கள் அவையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது-

எருமை மாட்டிறைச்சிகடந்த 2016-17ம் நிதியாண்டில் 13 லட்சத்து 30 ஆயிரத்து 753 டன் ஏற்றுமதியானது. இது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்றுமதி செய்யப்பட்டதைக் காட்டிலும் 11.5 சதவீதம் குறைவாகும். மதிப்பின் அடிப்படையில் பார்க்கும் போது, கடந்த 2015-16ம் ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 569 (55.4கோடிடாலர்)கோடிக்கு ஏற்றுமதி ஆன நிலையில், ரூ. 3 ஆயிரத்து 415 (53 கோடி டாலர்)கோடியாக சரிந்துள்ளது. இது 4.35 சதவீதம் குறைவாகும்.