Asianet News TamilAsianet News Tamil

தெலுங்கானா முதல்வராக இன்று பதவியேற்கிறார் ரேவந்த் ரெட்டி.. சோனியா காந்தி குடும்பத்தினர் பங்கேற்பு..

தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்க உள்ள நிலையில், சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

Revanth Reddy to take oath as Telangana new chief minister rahul gandhi, soniya gandhi, priyanka gandhi to attend Rya
Author
First Published Dec 7, 2023, 10:42 AM IST

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக அனுமுலா ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்க உள்ளார். ஐதராபாத்தில் உள்ள லால் பகதூர் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1:04 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, எம்.பி. ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த பதவியேற்பு விழாவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், இந்தியக் கூட்டணித் தலைவர்களான மு.க.ஸ்டாலின், உமர் அப்துல்லா, டி.ராஜா, டெரெக் ஓ பிரையன் ஆகியோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கின்றனர். புதிய முதலமைச்சருடன் குறைந்தது 5-6 அமைச்சர்கள் இன்று பதவியேற்பார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இன்று புதிதாக பதவியேற்க உள்ள அமைச்சர்களின் பட்டி விக்ரமார்காவுக்கு வருவாய்த் துறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் மற்ற தலைவர்களில் பஞ்சாயத்து மற்றும் எஸ்சி/எஸ்டி நலத்துறை சீதக்காவும், உத்தம் குமாருக்கு நிதி இலாகாவும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதே போல், பொன்னம் பிரபாகர், ஸ்ரீதர் பாபு, தும்மலா நாகேஸ்வர ராவ் ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது..

தெலங்கானாவில் ஆளும் சந்திர சேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் ஆட்சியை அகற்றி காங்கிரஸ் ஆட்சியை கைபற்றி உள்ளது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராகவும், தெலுங்கானாவின் அடுத்த முதல்வராகவும் ரேவந்த் ரெட்டியை காங்கிரஸ் தலைமை செவ்வாய்க்கிழமை நியமித்தது. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்த ரேவந்த் ரெட்டி, மாநிலத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

100+ இணையதளங்களை தடை செய்த மத்திய அரசு.. பகுதி நேர வேலை மோசடியில் சிக்காமல் எப்படி தப்பிப்பது?

2014 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தைப் பிரித்ததன் மூலம் தெலங்கானா என்ற புதிய மாநிலம் பிறந்தது. இந்தியாவின் இளைய மாநிலமான தெலுங்கானா சட்டப்பேரவை நவம்பர் 30 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலி பதிவான வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன, இதில் காங்கிரஸ் மொத்தமுள்ள 119 இடங்களில் 64 இடங்களைப் பெற்று முதன்முறையாக அம்மாநிலத்தி ஆட்சி அமைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios