Retired government employee to build temple for PM Modi
பிரதமர் நரேந்திர மோடிக்கு, கோயில் கட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கோயில், உத்தரபிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் கட்டப்பட உள்ளதாக தெரிகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பொதுப்பணித்துறையில், நீர்பாசனத் துறையின் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஜே.பி.சிங்.
இவர், பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளர் ஆவார். மோடிக்கு கோயில் கட்டுவது குறித்து அவர் பேசும்போது, பிரதமர் மோடியின் சாதனைகளைப் பாராட்டும் வகையில் இக்கோயில் கட்டப்படுவதாக கூறினார்.
இதற்காக 5 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளதாகவும், 100 அடி உயரத்தில் மோடியின் பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த கோயிலை 2 வருடங்களில் கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான பூமி பூஜை வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் ஜே.பி.சிங் தெரிவித்தார்.
