கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக, பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 தேதி பிரதமர் மோடி அறிவித்தார். பழைய ரூபாய் 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாததையடுத்து புதிய 5௦௦ மற்றும் 2௦௦௦ தாள்களை வெளியிட்டது ரிசர்வ் வங்கி.

மேலும் புதிய ரூபாய் 10, 50, 200, தாள்களும் வெளியாகியாது. இந்நிலையில் ஸ்ரீ குரு கோபிநாத் சிங் ஜி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ரூபாய் 350 நாணயத்தை வெளியிட உள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாணயத்தின் சிறப்பம்சம்:

எடை :

34.65 கிராம் முதல் 35.35 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

அசோக தூண் சின்னம் மற்றும் சத்திய மேவ ஜெயதே என்ற வாசகமும் இடம்பெற உள்ளது.

குறிப்பு:

ரூ.350 நாணயம் ஒரு குறிப்பிட்ட எண்ணிகையில் மட்டுமே அச்சிடப் பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.