குடியரசு தின விழா பார்வையார்கள் எண்ணிக்கை 64% அதிரடியாக குறைப்பு; காரணம் என்ன?
இந்த முறை டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் 45,000 பார்வையாளர்கள் மட்டுமே பங்கு அனுமதிக்கப்படுவார்கள். இது இதற்கு முன்பு இருந்த எண்ணிகையை விட சுமார் 64% குறைவாகும்.
குடியரசு தின விழாவில் இதுவரை 1.25 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்று வந்தனர். இது தற்போது 45,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்தபோது, இந்த எண்ணிக்கை வெறும் 25,000 ஆக இருந்தது. இதற்குக் காரணம் முக்கிய பாதையாக கருதப்படும் கர்தவ்யா பாத்துக்கு வருகை தரும் பார்வையார்களுக்கு நாள் முழுவதும் வந்து செல்வதற்கு எளிதானதாக வைத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் தெரிவித்து இருக்கும் மத்திய பாதுகாப்புத்துறைக்கான இணைச் செயலாளர் ராஜேஷ் ரஞ்சன், ''இருக்கைகள் அனைத்தும் சரியான முறையில், இடம் விட்டு போட வேண்டியது இருக்கிறது. தற்போது போட இருக்கும் 45,000 இருக்கைகளில் 32,000 இருக்கைகள் மட்டுமே பொது மக்களுக்கு ஒதுக்கப்படும். இந்த முறை ஆன்லைனில் தான் பார்வையாளர்கள் தங்களுக்கான இடத்தை பதிவு செய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் நிகழ்ச்சி.! வைரலாகும் சூப்பர் க்ளிக்ஸ் !!
பாதுகாப்புத்துறை செயலாளர் கிரிதர் அரமனே கூறுகையில், ''இந்த முறை விழாவின் முக்கிய கருபொருளே பொது மக்கள் பங்கேற்க வேண்டும் என்பதுதான். மக்கள் ஒற்றுமை என்று கருப்பொருளுக்கு பெயர் இடப்பட்டுள்ளது. மத்திய விஸ்டா திட்டத்தில் இருக்கும் நபர்கள் அவர்களது குடும்பத்தினர், கர்தவ்யா பாத் பராமரிப்புத் தொழிலாளர்கள், பால் பூத் வெண்டர்கள், காய்கறி மற்றும் சிறிய பலசரக்கு கடை வைத்திருப்பவர்கள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு இருக்கின்றனர்.
விஐபி அழைப்பாளர்களும் 12,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது இதற்கு முன்பு 50,000 ஆக இருந்தது. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு பேரணியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. போரில் ஈடுபடுத்தப்படும் டாங்க், பிரமோஸ், ஆகாஷ் ஏவுகணை, எடை குறைவான ஹெலிகாப்டர் போன்றவை அணி வகுப்பில் இடம் பெறும்'' என்றார்.
நடுரோட்டில் ஸ்கூட்டரில் ஆபாசம்... வைரல் வீடியோ மூலம் சிக்கிய வாலிபர்
நடப்பாண்டில் நடைபெறும் குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டின் அதிபர் அப்துல் பத்தா அல் சிசி கலந்து கொள்கிறார். முதன் முறையாக 120 வீரர்கள் கொண்ட எகிப்து நாட்டின் ராணுவப் படையும் குடியரசு தின விழாவில் பங்கேற்கிறது.