நடுரோட்டில் ஸ்கூட்டரில் ஆபாசம்... வைரல் வீடியோ மூலம் சிக்கிய வாலிபர்
உத்தரப் பிரதேசத்தில் ஸ்கூட்டரில் இளம் பெண்ணுடன் ஆபாசமான கோலத்தில் அமர்ந்தபடி பயணித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனது ஸ்கூட்டரில் ஓர் இளம் பெண்ணுடன் ஆபாசமான கோலத்தில் அமர்ந்தபடி பயணம் செய்துள்ளார். இவர்கள் இவ்வாறு பயணிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.
அந்த வீடியோவில் இளம் பெண் ஸ்கூட்டரின் முன்பகுதியில் அமர்ந்து அந்த இளைஞரை கட்டி அணைத்தபடி செல்லும் காட்சி உள்ளது. லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ காவல்துறையினரின் கவனத்துக்கு வந்தது.
Bank Robbery: வங்கியில் கொள்ளையடிக்க வந்த கும்பலை அடித்து விரட்டிய பெண் காவலர்கள்
காவல்துறையினர் வீடியோவில் உள்ள இளைஞரை அடையாளம் கண்டு, புதன்கிழமை அவரைக் கைது செய்தனர். பொது இடங்களில் ஆபாசமாக நடந்துகொண்டதற்காக அவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது ஸ்கூட்டரையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
கைதான அந்த இளைஞர் 23 வயதாகும் விக்கி ஷர்மா என்றும் அவருடன் பயணித்த இளம் பெண் ஒரு மைனர் என்றும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
நடுரோட்டில் ஸ்கூட்டரில் ஆபாசம்... வைரல் வீடியோ மூலம் சிக்கிய வாலிபர்