நாட்டின் 68-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள

 ராஜபாதையில் அரசு சார்பில் 

குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.ஆனால் தொடர் மழை 

காரணமாக தாமதமாக விழா தொடங்கியது.

விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, முதலில் அமர் ஜவான் ஜோதியில் 

மலர் வளையம் வைத்து,

உயிர்நீத்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலிசெலுத்தினார். முப்படை தளபதிகளும் 

அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து குடியரசு தின விழா 

நடைபெறும் ராஜபாதைக்கு புறப்பட்டார் மோடி.

இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து பிரணாப் முகர்ஜி மற்றும் சிறப்பு விருந்தினர் 

அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

முப்படை வீரர்கள் புடைசூழ இருவரும் விழா நடைபெறும் ராஜபாதைபகுதிக்கு அழைத்துவரப்பட்டனர்.

இதனையடுத்து விழா தொடங்கியது. விழா மேடைக்கு வந்த இருவரையும் முப்படை தளபதிகள் , 

பிரதமர் மோடி வரவேற்றனர். இதனையடுத்து 

ராஜ்பாத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடியேற்றிவைத்தார்.

இதைத்தொடர்ந்து கண்கவர் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. முப்படை வீரர்களின் இந்த சிறப்புமிக்க

அணிவகுப்பு மரியாதையை பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டார்.

முப்படையின் பலைத்தை பறைசாற்றும் வகையில் இந்த அணிவகுப்புகள் நடைபெற்றன.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின்சயீத் அல் நஹ்யான் 

அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.

கண்களைக் கவரும் வகையில் நடைபெற்ற இந் வண்ணமிகு விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு

அனைவரையும் கவர்ந்தது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள்

 பங்கேற்கின்றனர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

குடியரசு தினத்தையொட்டி இன்று காலை 10.35 மணி முதல் 12.15 மணி வரை டெல்லி இந்திரா காந்தி 

சர்வதேச விமான நிலையத்தில் வர்த்தக விமானங்கள் இறங்கவும்,

கிளம்பவும் தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.