Taj Mahal:Agra: supreme court:தாஜ் மஹாலைச் சுற்றி 500 மீட்டருக்குள் கடைகள் நடத்தத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆக்ராவில் உள்ள வரலாற்று சிறப்பு கொண்ட தாஜ் மஹால் நினைவுச் சின்னத்தைச்சுற்றி 500 மீட்டருக்குள் எந்தவிதமான வர்த்தக செயல்பாடுகளும் நடத்தத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆக்ராவில் உள்ள வரலாற்று சிறப்பு கொண்ட தாஜ் மஹால் நினைவுச் சின்னத்தைச்சுற்றி 500 மீட்டருக்குள் எந்தவிதமான வர்த்தக செயல்பாடுகளும் நடத்தத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆக்ரா மேம்பாட்டு ஆணையம் உடனடியாக அனைத்துவிதமான வர்த்தகச்செயல்பாடுகளையும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வரலாற்று சிறப்பு அம்சம் கொண்ட 17ம் நூற்றாண்டு வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட தாஜ் மஹாலை சிதையாமல் காக்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறை!அரசியல்சாசன அமர்வு விசாரணை நேரலை
இதற்காக தாஜ் மஹாலைச் சுற்றி 500 மீட்டருக்குள் எந்தவிதமான வர்த்தகச் செயல்பாடுகளையும் நடத்த தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்சி மேத்தா தாக்கல் செய்த மனுவில், “தாஜ் மஹாலைச் சுற்றி எகோ-சென்சிட்டிவ் பகுதி இருக்கிறது. இது யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச்சின்னம். சுற்றுச்சூழல் மாசிலிருந்து தாஜ் மஹாலைக் காக்கும் வகையில் கடந்த 1996ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், 10,400 சதுர கிமீ பரப்பை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து.
என்ஐஏ சோதனை 2வது சுற்று: 8 மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட பிஎப்ஐ அமைப்பினர் கைது
தாஜ்மஹால் அருகே இடத்தை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் கட்டப்பட்டுள்ளன. சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகளும் நடக்கின்றன. இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது”எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ஏஎஸ். ஒகா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ மனுதாரரின் கோரிக்கையை ஏற்கிறோம். தாஜ் மஹாலைச் சுற்றி 500 மீட்டர் சுற்றளவுக்குள் எந்தவிதமான வர்த்தகச் செயல்பாடுகளும் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.
இந்தத் தடையை ஆக்ரா மேம்பாட்டு ஆணையம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தாஜ்மஹால் எல்லை சுவற்றிலிருந்து 500 மீட்டருக்குள் இருக்கும் கடைகள் அனைத்தையும் அகற்ற வேண்டும்.
சோனியா கோபம்! ராஜஸ்தானில் காய்நகர்த்தும் கெலாட்! காங்கிரஸ் தலைவராகும் வாய்ப்பு குறைகிறது
தாஜ் மஹால் சுற்றி 500 மீட்டருக்குள் மரங்களை எரிப்பது, திடக்கழிவுகளை எரிப்பது, நகராட்சி திடக்கழிவு, வேளாண் கழிவு குவிப்பது அனைத்தும் தடை செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.