supreme court live streaming: Shiv Sena: உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறை!அரசியல்சாசன அமர்வு விசாரணை நேரலை
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக அரசியல்சாசன அமர்வு விசாரணை இன்று(27ம்தேதி) நேரலை செய்யப்பட்டு வருகிறது.
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக அரசியல்சாசன அமர்வு விசாரணை இன்று(27ம்தேதி) நேரலை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2018ம் ஆண்டு, செப்டம்பர் 27ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அரசியல்சாசன அமர்வு முக்கியத்துவம் கொண்ட வழக்குகளை நேரலை செய்யலாம் என்று தீர்ப்பளித்திருந்தார்.
என்ஐஏ சோதனை 2வது சுற்று: 8 மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட பிஎப்ஐ அமைப்பினர் கைது
அதன்படி இன்று உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவுக்கும், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவுக்கும் இடையிலான வழக்கு விசாரிக்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தில் 3 அரசியல்சாசன அமர்வுகள் உள்ளன. இதில் நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 2வது அரசியல்சாசன அமர்வு நடத்தும் விசாரணை நேரலை செய்யப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் நேரலை விசாரணை webcast.gov.in/scindia/ என்ற தளத்தில் நேரலையாக பார்க்கலாம்.
செப்டம்பர் 27ம் தேதி முதல், அரசியல்சாசன அமர்வு விசாரணை அனைத்தும் நேரலை விசாரணை செய்யப்படும் என சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி அரசியல்சாசன அமர்வு விசாரணை நேரலை செய்யப்படுகிறது.
சோனியா கோபம்! ராஜஸ்தானில் காய்நகர்த்தும் கெலாட்! காங்கிரஸ் தலைவராகும் வாய்ப்பு குறைகிறது
உச்ச நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையை நேரலை செய்வதற்காகவே தனியாக யூடியூப் சேனல் அல்லது பிளாட்ஃபார்ம் விரைவில் அமைக்கப்படும் என்று தலைமை நீதிபதி உமேஷ் லலித் நேற்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவசேனா கட்சியும், கொடியும் தங்களுக்குத்தான் சொந்தம் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு கோரியது, அதற்கு உத்தவ் தாக்கரே தரப்பு எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து, இருதரப்பும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர் இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வு விசாரிக்கு ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது.
அனில் அம்பானிக்கு நவம்.17 வரை கெடு! வருமானவரி துறை நடவடிக்கை எடுக்க மும்பை உயர் நீதிமன்றம் தடை
அதுமட்டுமல்லாமல் அரசியலமைப்புச் சட்டத்தின் 10வது பிரிவோடு தொடர்புடைய எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது, சபாநாயகரின் அதிகாரம், ஆளுநரின் அதிகாரம், நீதிமன்ற மறுசீராய்வு உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.