Asianet News TamilAsianet News Tamil

இந்திய தூதரகத்தின் இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்... இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!!

இலங்கையில் உள்ள இந்தியர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

register on the website of the embassy of india says ministry of external affairs to indians in sri lanka
Author
India, First Published May 19, 2022, 4:11 PM IST

இலங்கையில் உள்ள இந்தியர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் நாட்டில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. பொருட்களின் விலை உச்சத்தை தொட்டது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை அறிவித்தது.

register on the website of the embassy of india says ministry of external affairs to indians in sri lanka

இதனிடையே போராட்டகரர்களின் அழுத்தத்திற்கு பணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இந்த நிலையில் கொழும்பில் உள்ள ராஜபக்சே கட்சி அலுவலகத்துக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் ஆளும்கட்சியின் எம்.பி  ஒருவர் உயிரிழந்தார். இலங்கை தலைநகர் கொழும்புவை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்தது. இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 231 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

register on the website of the embassy of india says ministry of external affairs to indians in sri lanka

இந்த நிலையில் இலங்கையில் உள்ள இந்தியர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யும் பொழுது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தனித்தனி இணைய தளங்களில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியர்கள் www.hcicolombo.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இலங்கையில் தங்கி இருக்கும் இந்தியர்கள் https://hcicolombo.gov.in/national_registration_nris என்ற இணையதளத்திலும், அங்குள்ள இந்திய மாணவர்கள், https://hcicolombo.gov.in/national_registration_students என்ற இணையதளத்திலும் பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இலங்கையில் தொடர்ந்து பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios