ஜி20 தலைவர்கள் கூட்டம்: மறுவடிவமைக்கப்பட்ட இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு ஜூலை 26இல் திறப்பு!

ஜி20 தலைவர்கள் கூட்டங்களை நடத்தும் மறுவடிவமைக்கப்பட்ட இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு வளாகம் ஜூலை 26ஆம் தேதி திறக்கப்படவுள்ளது

Redeveloped ITPO complex will be inaugurated on 26th July which will host India G20 Leaders meeting

ஜி20 அமைப்பு கடந்த 1999ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த அமைப்பின் தலைமை கடைசியாக இந்தோனேசியாவிடம் இருந்தது. அதன் தொடர்ச்சியாக, ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு டெல்லியில் ஜி20 நாடுகளின் மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. இதனையொட்டி, நாடு முழுவதும் 200 இடங்களில் பல்வேறு தலைப்புகளில் ஜி20 நாடுகள் தொடர்பான கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஜி20 தலைவர்கள் கூட்டங்களை நடத்தும் மறுவடிவமைக்கப்பட்ட இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு வளாகம் (ITPO) ஜூலை 26ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. டெல்லி பிரகதி மைதானத்தில் சுமார் 123 ஏக்கரில் அமைந்துள்ள இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு வளாகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் நடைபெறும்.

தமிழ்நாட்டுக்கு வாங்க; மணிப்பூர் வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

இந்த வளாகத்தில் அமைந்துள்ள உள் அரங்கங்கமான, மறுவடிவமைக்கப்பட்ட நவீன சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம் (IECC) உலகின் சிறந்த 10 கண்காட்சி மற்றும் மாநாட்டு வளாகங்களில் இடம்பிடித்துள்ளது. ஜெர்மனியில் உள்ள Hannover கண்காட்சி மையம், ஷாங்காயில் உள்ள தேசிய கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம் (NECC) போன்றவற்றுக்கு போட்டியாக இந்த மையம் திகழ்கிறது.

Redeveloped ITPO complex will be inaugurated on 26th July which will host India G20 Leaders meeting

ஐஇசிசியின் உள்கட்டமைப்பானது, உலகத் தரம் வாய்ந்த நிகழ்வுகளை மிகப் பெரிய அளவில் நடத்தும் இந்தியாவின் திறனுக்குச் சான்றாகும். இங்குள்ள கன்வென்ஷன் சென்டரில் 7,000 நபர்கள் அமரக்கூடிய பெரிய இருக்கை வசதி உள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி ஓபரா ஹவுஸில் 5500 நபர்கள் அமரக்கூடிய இருக்கை வசதிகளே உள்ள நிலையில், தோராயமான இருக்கை திறனை விட ஐஇசிசியில் அதிகமான இருக்கை வசதி உள்ளது. இந்த ஈர்க்கக்கூடிய அம்சம், உலக அளவில் மிகப்பெரிய மாநாடுகள், சர்வதேச உச்சி மாநாடுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்ற இடமாக ஐஇசிசி-யை தேர்வு செய்ய தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Redeveloped ITPO complex will be inaugurated on 26th July which will host India G20 Leaders meeting

தயாரிப்புகள், புதுமைகள் மற்றும் யோசனைகளைக் காட்சிப்படுத்த ஏழு புதுமையான இடங்களை கண்காட்சி அரங்குகள் வழங்குகின்றன. இந்த அதிநவீன அரங்குகள் கண்காட்சியாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சிறந்த தளத்தை வழங்குகிறது. வணிக வளர்ச்சி மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை மேம்படுத்துகிறது. அத்துடன், ஐஇசிசியில் 3,000 நபர்கள் அமரும் வகையிலான ஆம்பிதியேட்டரும் உள்ளது. மூன்று PVR திரையரங்குகளுக்குச் சமமான, இந்த பிரம்மாண்டமான அரங்கம், பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பார்வையாளர்களை வசீகரிக்கும் என தெரிகிறது. 

Redeveloped ITPO complex will be inaugurated on 26th July which will host India G20 Leaders meeting

பார்வையாளர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ஐஇசிசியில் 5,500க்கும் மேற்பட்ட வாகன நிறுத்த இடங்களும் உள்ளன. பார்வையாளர்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் செல்ல முடியும் என்பதை உறுதி செய்யும் வகையில், சிக்னல் இல்லாத சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios