இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்களின் பங்களிப்பு - நினைவு தபால் தலையை இன்று வெளியிட்டார் ஜே.பி நட்டா!
JP Nadda Releases Commemorative Stamp : இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கையில் தோட்டத் தொழில் மற்றும் பிற முக்கியமான உள்கட்டமைப்புகளை கட்டியெழுப்புவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதை அங்கீகரிக்கும் நினைவு அஞ்சல் முத்திரையை பாஜக தலைவர் ஜே.பி நட்டா இன்று வெளியிட்டார்.
மத்திய மாகாணத்தில் தோட்டங்களை அபிவிருத்தி செய்வதில் முக்கிய பங்காற்றிய தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு சென்ற முதல் தமிழர்களின் வருகையின் 200 வருட மைல்கல்லை ஒட்டி இந்த நினைவேந்தல் நிகழ்வு நடந்து மிகவும் பொருத்தமானது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜே.பி.நட்டா இன்று சனிக்கிழமை பகல் 12 மணியளவில் அந்த நினைவு முத்திரையை வெளியிட, இலங்கை அரசாங்கத்தின் கிழக்கு மாகாண ஆளுநர் தொண்டமான் அதை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார். பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரீக பிணைப்பை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தியில் உஜ்வாலா திட்ட பயனாளியின் வீட்டில் தேநீர் அருந்திய பிரதமர் மோடி..
இந்த நிகழ்ச்சிக்கு முன், திரு. அண்ணாமலை வெளியிட்ட செய்தியில், 2014ல் பதவியேற்றது முதல், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்கு, பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார். மோடியின் தலைமையில், மத்திய அரசு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என, அண்ணாமலை கூறினார்.
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு 14,000 வீடுகள், சுகாதாரம், கல்வி மற்றும் கலாச்சார வசதிகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் உள்ளிட்டவரை அவர் மேற்கோளிட்டார். மேலும், சவாலான பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவின் அண்டை நாடு என்ற கொள்கையின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வழங்கப்பட்ட சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான கணிசமான நிதி உதவியையும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து முதல் குழு இலங்கை வந்து 200 வருடங்கள் ஆகின்றன என்பதையும் திரு அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அஞ்சல் முத்திரை வெளியீடு இரு நாட்டின் நல்லுறவை அதிகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.