real estate come soon of gst surrounding

ரியல் எஸ்டேட் துறை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து அடுத்த மாதம் நடக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிநேற்று தெரிவித்தார்.

அமெரிக்கா சென்றுள்ள அருண் ஜெட்லி, வாஷிங்டன் நகரில் உள்ள ஹார்வார்ட் பல்கலையில், வரிச்சீர் திருத்தம் குறித்து நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது-

இந்தியாவில் ரியல் எஸ்ட்டேட் துறை மட்டும் அதிகமான வரி ஏய்ப்பு செய்வதை நான் மிக அறிவேன். அந்த துறையில்தான் அதிகமான பணப்புழக்கமும் இருக்கும். அசாம் மாநிலம், கவுகாத்திநகரில் நவம்பர் 9-ந்தேதி நடக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும். ஜி.எஸ்.டி. வரம்புக்குள் ரியல் எஸ்டேட் துறையை கொண்டு வர வேண்டும் என பல மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன. நானும் ரியல்எஸ்டேட் துறையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர விரும்புகிறேன்.

ஆதலால், அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் நிச்சயம் ரியல் எஸ்டேட் துறை குறித்து விவாதிக்கப்படும். சில மாநிலங்கள் எதிர்த்தாலும், பல மாநிலங்கள் ஆதரவு தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஆழ்ந்த விவாதங்கள் நடத்தினால், கருத்தொற்றுமைக்கு வந்துவிடலாம். ஜி.எஸ்.டி. வரம்புக்குள் ரியல் எஸ்டேட் துறை வந்தால், நுகர்வோர்கள் ஒட்டுமொத்த பொருளுக்கும் ஒருவரி மட்டும் செலுத்தினால் போதுமானது. 

ரூபாய் நோட்டு தடை நடவடிக்கை என்பது, அடிப்படையிலான சீர்திருத்த நடவடிக்கையாகும். வரி செலுத்தும் சமூகமாக நாட்டை மாற்ற இந்த நடவடிக்கை அவசியமாகும். நீண்ட காலத்தில் பார்க்கும் போது, ரூபாய் நோட்டை தடை நடவடிக்கையால், டிஜிட்டல் பரிமாற்றங்கள் அதிகரிக்கும். தனிநபர் வரி செலுத்தும் அளவு அதிகரிக்கும். பணப்புழக்கத்தை 3 சதவீதம் சந்தையில் சுருக்கி இருக்கிறது. 

இவ்வாறு அவர் பேசினார்.