சபாநாயகர் கூறும் நேரத்தில் கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என முதல்வர் குமாரசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

காங்கிரஸ் மஜதே எம்.எல்.ஏக்கள் 10 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில் அங்கு குமாரசாமி ஆட்சி எப்போது வேண்டுமானலும் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் சற்று முன் கர்நாடக சட்டப்பேரவை தொடங்கியது. அப்போது பேசிய பேசிய முதல்வர் குமாரசாமி, ‘’ நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் அனுமதிக்க வேண்டும். ஆட்சியமைக்கத் தேவையான உறுப்பினர்கள்  உள்ளனர். ஆகையால் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம். சபாநாயகர் கூறும் நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கிறோம். தற்போதைய அரசியல் சூழல்களால் வேலைகளை முழுமையாக செய்ய முடியவில்லை’’ என அவர் கேட்டுக் கொண்டார். 

சற்று முன் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில் எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமா கடிதம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. இப்போதைய நிலையே தொடர வேண்டும். அவர்களது கடிதத்தை நிராகரிக்கவோ, ஏற்கவோ கூடாது. செவ்வாய்க்கிழமை வரை எந்த நடவடிக்கையும் சபாநாயகர் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருப்பதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.