Asianet News TamilAsianet News Tamil

கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் எச்சரிகையாக இருங்கள்… அறிவுறுத்திய ஆர்.பி.ஐ!! | RBI

#RBI கிரிப்டோ வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

RBI warns to cryptocurrency investers
Author
India, First Published Nov 12, 2021, 4:53 PM IST

கிரிப்டோ வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளை ரிசர்வ் வங்கி தடை செய்தது. பின்னர் அத்தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்தாண்டு பிப்ரவரியில் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளையும் தடை செய்யும் வகையில், கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சி மசோதா 2021ஐ மத்திய அரசு உருவாக்கியது. இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டில் கிரிப்டோகரன்சி முதலீடு மற்றும் பயன்பாட்டை தடை செய்யும் வகையில் ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவை, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதன்தொடர்ச்சியாக பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளில் இந்தியர்கள் அதிக அளவு ஆர்வம் காட்டிவருகின்றனர். தற்போதுவரை 105 மில்லியன் இந்தியர்கள், அதாவது இந்திய மக்கள் தொகையில் 7.9 சதவீதம் பேர் இந்திய பணப்பரிமாற்றம் மூலமாக கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கவலை தெரிவித்துள்ளார்.

RBI warns to cryptocurrency investers

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பேரியல் பொருளாதாரம் மற்றும் நிதி உறுதித்தன்மை பார்வையில் இருந்து பார்க்கும்போது கிரிப்டோகரன்சி போன்ற டிஜிட்டல் கரன்சி வர்த்தகங்கள் தீவிர ஆபத்துகளைக் கொண்டதாக உள்ளன என்றும் வரலாற்று உச்சங்களை எட்டிய டிஜிட்டல் கரன்சிகள் தொடர்ந்து கடும் இறக்கங்களையும் சந்தித்து வருகின்றன என்றும் தெரிவித்தார். எனவே முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்த அவர், கடந்த ஆண்டு கிரிப்டோகரன்சி வர்த்தகம் தொடர்பாக ரிசர்வ்வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்ததோடு, கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் மீதானதடையையும் நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்றும் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு டிஜிட்டல் கரன்சி வர்த்தகம் இந்திய முதலீட்டாளர்கள் குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது என்று கூறிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், பிட்காயின் உட்பட கிரிப்டோ கரன்சிகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றன என்றும் தற்போது பிட்காயின் 67,089 டாலர் என்ற அளவில் வர்த்தகம் ஆகிறது என்றும் தெரிவித்தார்.

RBI warns to cryptocurrency investers

ஓராண்டில் 131 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், ஒட்டுமொத்த கிரிப்டோ முதலீடுகள் 3 லட்சம் கோடி டாலரை எட்டியுள்ளது என்றும் ஆனால் கிரிப்டோ வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அரசு இன்னும் இயற்றவில்லை என்றும் தெரிவித்தார். அதற்கான முயற்சிகளில், துறைசார்ந்த நிபுணர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக கூறிய அவர், கிரிப்டோ வர்த்தகத்தில் ஏற்கெனவே பலகட்ட எச்சரிக்கைகள் வழங்கப்பட்ட நிலையில், அரசு தீவிர வரம்புகளை நிர்ணயிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில, கிரிப்டோ வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு சவால்களை எல்லாம் சமாளித்து சிறப்பான நிலையில் இந்தியப் பொருளாதாரம் இருப்பதாகவும், போதுமான அந்நியசெலாவணி இருப்பு இருப்பதாகவும், முதலீடுகள், கடன் வளர்ச்சி ஆகியவை அடுத்த ஆண்டில் நல்ல முன்னேற்றம் அடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios