Asianet News TamilAsianet News Tamil

புழக்கத்தில் உள்ளதா ரூ.500 கள்ள நோட்டு? இணையத்தில் வைரலாகும் வீடியோ... ரிசர்வ் வங்கி விளக்கம்!!

இரண்டு வகையான 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக வெளியான வீடியோ குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 

rbi explains about 500 rupees note wheather it is fake
Author
First Published Mar 6, 2023, 6:04 PM IST

இரண்டு வகையான 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக வெளியான வீடியோ குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அதன் பின்னர் புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி, 200, 500, 2000 ஆகிய ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் 500 ரூபாய் நோட்டுகள் பற்றி ரிசர்வ் வங்கி ஒரு தகவலை அளித்துள்ளது. அது என்னவென்றால் தற்போது 2 வகையான 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும் அந்த இரண்டு நோட்டுகளுக்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காஷ்மீரில் புத்தக புரட்சி.. “நூலக கிராமம்”..! வீட்டுக்கு வீடு நூலகம் அமைக்கும் இளைஞர் சிராஜுதின் கான்

இந்த இரண்டு வகையான நோட்டுகளில் ஒரு வகையான நோட்டுகள் போலியான நோட்டுகள் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றும் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், ஒரு வகையான நோட்டு போலியானது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதை அடுத்து PIB வீடியோவைப் பற்றிய உண்மைச் சரிபார்ப்பையும் செய்துள்ளது.

இதையும் படிங்க: ஏசியாநெட் கொச்சி அலுவலகம் மீது SFI தாக்குதல்... SFI மாவட்ட செயலாளர் அர்ஜுன் பாபு போலீசில் சரண்!!

அதில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ முற்றிலும் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம் அல்லது காந்திஜியின் படத்திற்கு மிக அருகாமையில் போகும் பச்சைக் கீற்று உள்ள 500 ரூபாய் நோட்டை வாங்கக் கூடாது என்று வீடியோவில் கூறப்பட்டுள்ளது. அது முற்றிலும் பொய்யான தகவல். சந்தையில் இருக்கும் இரண்டு வகையான நோட்டுகளும் செல்லுபடியாகும். இரண்டு வகையான நோட்டுகளும் சந்தையில் புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios