மிகப்பிரபலமான துணி என கருதப்படும் ‘ரேமாண்ட்’ நிறுவனத்தின் அதிபர் டி.விஜய்பாத் சிங்கானியாவை அவரின் மகன் துரத்திவிட்டதால் அவர் மிகவும் வறுமையில் வாடுகிறார். தனது மகனிடம் இருந்து உரிய சொத்துக்களை திரும்பப் பெற்றுத் தருமாறு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

‘தி பெர்பெக்ட் மேன்’ என்ற விளம்பரத்தோடு ஆண்களுக்கான ஆடை வடிவமைப்பில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது ‘தி ரெமண்ட்ஸ்’. இந்த நிறுவனத்தின் நிறுவனம் டாக்டர் விஜய்பாத் சிங்கானியா(வயது 78). இவரின் ஒரே மகன் கவுதம். கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியான சிங்கானியா, மும்பையில், மலபார்ஹில்ஸ் பகுதியில் 36 மாடி அடுக்கு மாடி குடியிருப்பான ஜே.கே. ஹவுஸில் வசித்துவருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் தனது பெயரில் உள்ள ரூ. ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள், பங்குகளை தனது ஒரே மகன் கவுதமின் பெயருக்கு சிங்கானியா மாற்றினார். இதன்பின் மகன் கவுதமின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு, அவரை ஒதுக்கிவைக்கத் தொடங்கினார். முறையாக கவனிக்காமல் இருந்து வருகிறார். இதனால் மனம் வெறுத்த கோடீஸ்வரர் சிங்கானியா தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் சிங்கானியா தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கூறியிருப்பதாவது-

ரேமண்ட் குழுமத்தின் நிறுவனரான சிங்கானியா தற்போது முதுமை காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தனது ரூ.ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை தனது மகன்கவுதமின் பெயருக்கு எழுதிவைத்தார். ஆனால், சமீபகாலமாக கவுதம் தனது தந்தையை கவனிப்பதில்லை. அனைத்து சொத்துக்களையும் அபகரித்துக் கொண்டு தனது தந்தையை வௌியே அனுப்பிவிட்டார்.

இதனால் ஜூஹூ பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்துவௌியேறி, மாதம் ரூ. 7 லட்சம் வாடகையில், நியோபன் கடற்கரைப்பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். மும்பையில் இருந்து எங்கும் வௌியே செல்லசிங்கானியாவுக்கு சொந்தமாக ஒரு கார்கூடவும் இல்லை, டிரைவர் கூட இல்லாமல் வாழ்ந்து வருகிறார். ஆதலால், தனக்குரிய பங்குகளை, வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையான உதவிகளை பெற்றுத்தர உத்தரவிட வேண்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், வரும் 22ந்தேதிக்கு ஒத்திவைத்தது.