ராமாயணத்தில் வரும் ராவணன் நொய்டாவில் பிறந்தவர்: சுப்பிரமணியன் சுவாமி அதிரடி..!
ராமாயணத்தில் வரும் இலங்கை மன்னன் ராவணன் இலங்கையில் பிறக்கவில்லை அவர், டெல்லி நொய்டா அருகே பீஷ்ராக் கிராமத்தில் பிறந்தார் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி புதிய விளக்கம் அளித்துள்ளார்.
ராமாயணத்தில் வரும் இலங்கை மன்னன் ராவணன் இலங்கையில் பிறக்கவில்லை அவர், டெல்லி நொய்டா அருகே பீஷ்ராக் கிராமத்தில் பிறந்தார் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி புதிய விளக்கம் அளித்துள்ளார்.
கோவா மாநிலம் மர்கோவாவில் நேற்று நடந்த கருத்தரங்கத்தில் பங்ேகற்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேசியதாவது:
இந்திய ரூபாய் வீழ்ச்சி அடைவதற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை. நாட்டை விட்டு மிகப்பெரிய அளவில் கறுப்புப்பணம் வெளியேறுவதே இதற்கு காரணம்.உலக அளவில் வளர்ச்சி அடைந்த நாடாக அமெரிக்கா இருக்கிறது. அந்த நாட்டின் பணமான டாலர்தான் உலகில் ஆதிக்கம் செலுத்தும், அதை முறியடிக்க வேறு எந்த நாட்டின் பணமும் இல்லை.
இலங்கையில் ராவணன் பிறந்ததாக நம்பப்படுகிறது. ஆனால், ராவணன் டெல்லி நொய்டா அருகே பீஷ்ராக் கிராமத்தில் பிறந்தார்.வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் செலவாணியில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்தியாவின் ரூபாய்தான் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது.கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கணக்கிட்டால் 14சதவீதம் சரிந்துள்ளது எனத் தெரிவித்தார்.