Asianet News TamilAsianet News Tamil

கேரளாவில் கம்ப்யூட்டர்களில் புகுந்தது `ரான்சம்வேர் வைரஸ்'...!!!

Ransomware cyber attack hits computers in two Kerala local bodies
ransomware wannacry-surfaces-in-kerala
Author
First Published May 15, 2017, 8:10 PM IST


உலக அளவில் கம்யூட்டர்களை அச்சுறுத்தி வரும் ரான்சம் வைரஸ் கேரளாவில் இரு பஞ்சாயத்து அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களை தாக்கி உள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய ‘டூல்’களை கொண்டு, உலகின் சுமார் 150 நாடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா, ரஷியா, ஸ்பெயின், இத்தாலி , உக்ரைன், தைவான் உள்பட 150 நாடுகளில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான தாக்குதல்கள் நடந்தன.

ransomware wannacry-surfaces-in-kerala

குறிப்பாக இந்த ரான்சம் வைரஸ் தாக்குதலால் இங்கிலாந்தில் மருத்துவ சேவைகள் , அரசு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. ரஷ்யாவும் உள்துறை அமைச்சகம், அந்நாட்டின் மிகப்பெரிய வங்கி ஷபெர் வங்கியிலும் இந்த சைபர் தாக்குதல் நடந்ததாக தெரிவித்தன.

ஜெர்மனியில் ரெயில்வே துறையிலும், ஸ்பெயினிலும் தொலைத் தொடர்பு உள்ளிட்ட அதிகமான நிறுவனங்களிலும் இந்த இணைய தாக்குதலால் பாதிப்படைந்தன.

ராம்சம் வேர் என்ற பிரத்யேக வைரசை வடிவமைத்து உலக அளவில் உள்ள அனைத்து கணினிகளுக்கும் பரவுமாறு செய்துள்ளனர். கம்ப்யூட்டர்களில் உள்ள அனைத்து தகவல்களையும், வீடியோ, புகைப்படம், ஆவணங்கள் அனைத்தையும் இந்த வைரஸ் லாக் செய்யும் தன்மை கொண்டது.

 மேலும், லாக் செய்யப்பட்ட பைல்களை விடுவிக்க, 300 டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை செலுத்தினால், 3 நாட்களுக்கு பின் விடுப்பேன் என எச்சரிக்கை செய்து உலக நாடுகளையே அலற வைத்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் இரு பஞ்சாயத்து அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களை ரான்சம்வேர் வைரஸ் தாக்கி உள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளன.

ransomware wannacry-surfaces-in-kerala

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தாரியோடே பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியர்கள் இன்று வழக்கம்போல்  கம்ப்யூட்டர்களை ஆன் செய்து பணியைத் தொடங்கினர்.

 அப்போது அவர்களுடைய 4 கம்ப்யூட்டர்களும் ஹேக்கிங் செய்யப்பட்டு  ரான்சம் வைரஸ் தாக்கி இருந்தது வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு, கம்ப்யூட்டரில் கோப்புகளை திறப்பதற்கு 300 டாலர் (ரூ.19 ஆயிரத்துக்கு மேல்) பிட்காயின்களை செலுத்துமாறு கம்ப்யூட்டர் திரையில் தோன்றியது இதுதொடர்பாக மாவட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது

இதுபோன்று பத்தனம்திட்டா மாவட்டத்தில் கொன்னி அருகே உள்ள அருவாபுலம் பஞ்சாயத்து அலுவலகத்திலும் கம்ப்யூட்டர்கள் ஹேக்கிங் செய்யப்பட்டு உள்ளது. மாநிலத்தில் பேப்பர் பைல்களை குறைக்க முக்கிய ஆவணங்கள் கம்ப்யூட்டர்களில் வைக்கப்பட்டு இருந்தன. ஹேக்கிங்கிற்கு உள்ளாகி உள்ள கம்ப்யூட்டர்களை எப்படி மீட்பது என ஐடி நிபுணர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios