நாட்டின் 14-வது ஜனாதிபதியாக பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

ஜனாதிபதியாக இருந்த  பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இம்மாதம் 25ந் தேதியோடு முடிந்ததையடுத்து, கடந்த 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்டவரும், தலித் சமூகத்தை சேர்ந்தவருமான ராம் நாத் கோவிந்த் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நேற்று மிகப் சிறப்பான வகையில் பதவி ஏற்பு விழா நடந்தது. பிரணாப் முகர்ஜியின் ஜனாதிபதி பதவிக்காலம் நேற்றுடன் முடிந்ததையடுத்து, அதிகாலையிலேயே பாதுகாப்பு படைகள் மாற்றப்பட்டன.

அக்பர் சாலையில் உள்ள ராம் நாத் கோவிந்தின் வீட்டுக்கதவை ராணுவத்துறை செயலாளரும், மேஜர் ஜெனருமான அணில் கோஸ்லா தட்டி, அவரை ஜனாதிபதி மாளிகைக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, மோட்டார் சைக்கிள் வாகனப் படையுடன் வந்திருந்த கோஸ்லா, ராம் நாத் கோவிந்தையும், அவரின் மனைவி சவிதாவையும் மரியாதையுடன் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் சென்றார். அங்கு தயாராக காத்திருந்த ஜனாதிபதிபிரணாப் முகர்ஜி  ராம்நாத்தை வரவேற்று உள்ேள அழைத்துச் சென்றார்.

சில மணி நேரங்களுக்கு பின், முறைப்படியான ஜனாதிபதி அணிவகுப்புகள், வீரர்கள் மரியாதை, பாதுகாப்பு படைகள் அணிவகுத்தன. ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, ராம் நாத் கோவிந்தை சிறப்பு பாதுகாப்பு படையினர் மரியாதையுடன் அழைத்துச் சென்றனர்.

முன்னதாக, பிரணாப் முகர்ஜியை விட்டு செல்லும் சிறப்பு பாதுகாப்பு படையினர் அவருக்கு மரியாதை செலுத்தினர். அதே பிரணாப்ஏற்றுக்கொண்டார். அதன்பின், புதிய ஜனாதிபதிக்கு பாதுகாப்புபணியை வீரர்கள் கவனிக்க தொடங்கினர்.

குண்டு துளைக்காத கருப்பு நிற காரில் ரெய்ஸானா ஹில்லில் பகுதியில் இருந்து நாடாளுமன்றம் வரை பிரணாப் முகர்ஜியும், ராம்நாத்தும்பயணித்தனர். காரின் முன், பின்புறம் வௌ்ளை, நீலம், தங்க நிற அடை அணிந்த வீரர்கள், குதிரைப்படை வீரரகள் அணிவகுத்துச் சென்றனர். நாடாளுமன்றம் வரை காரின் முன்னும்,பின்னும் முப்படையைச் சேர்ந்த ஆயிரம் வீரர்கள் அணிவகுப்பு நடத்தி பாரம்பரிய ‘ஹசார் சலாம்’ அளித்து மரியாதை ெசய்தனர்.

நாடாளுமன்றம் வந்து சேர்ந்தவுடன், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் ஆகியோர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும், பதவி ஏற்க இருக்கும் ராம் நாத் கோவிந்தையும் வரவேற்று மத்திய மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பதவி ஏற்புவிழா தொடங்குவதை அறிவித்த மத்தியஉள்துறை செயலாளர்ராஜீவ் மெகரிஷி, தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையை படித்து, ராம் நாத் கோவிந்தின் வெற்றியை அறிவித்தார்.

அதன்பின், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் , புதிய ஜனாதிபதிராம்நாத் கோவிந்துக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். “அரசியலமைப்பு சட்டத்தையும், சட்டத்தையும் பாதுகாப்பேன், காப்பாற்றுவேன்’’ என்று ராம் நாத் கோவிந்த் கூறியவுடன், ஜனாதிபதி இருக்கையில் இருந்து எழுந்த பிரணாப், அந்த இருக்கையில், ராம் நாத்தை அமரவைத்தார்.

அதன்பின், அங்கு அமர்ந்திருந்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், முப்படைத் தளபதிகள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் புதியஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் உரையாற்றினார். அவர் பேசியதாவது-

நான் மிகவும் சிறிய கிராமத்தில்  எளிமையான குடும்பத்தில் இருந்து இந்த உயர்ந்த இடத்துக்கு வந்துள்ளேன். இதை நமது நாடும், நமது சமூகமும் சொல்லும். எல்லோருக்கும் பிரச்சினை இருக்கிறது. அதற்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தன் முகவுரை ஒரு மந்திரத்தை கற்றுக்கொடுத்து இருக்கிறது. அதுதான் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்.  இந்த மந்திரங்களை நான் எப்போதும் பின்பற்றி நடப்பேன்.

இந்த நேரத்தில் என் இடத்தை அலங்கரித்த ராஜேந்திர பிரசாத், எஸ். ராதா கிருஷ்ணன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி ஆகியோரை நினைவு கூர்கிறேன். மகாத்கா காந்தி தலைமையில் ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தால் சுதந்திரத்தை பெற்றோம்.

இந்த தலைவர்கள் அரசியல் ரீதியான சுதந்திரம் மட்டும் போதும் என்று நினைக்கவில்லை. கோடிக்கணக்கான நம்முடைய மக்கள் பொருளாதார, சமூக ரீதியான சுதந்திரத்தை அடைய வேண்டும் என்று எண்ணினார்கள்.

இந்த தேசம் என்பது பலவிதமான மாநிலங்கள், மண்டலங்கள், மதங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், வாழ்க்கைமுறைகள் எண்ணற்ற கலப்புகளை கொண்டது. நாம் அனைவரும் வேறுபட்டவர்களாக இருந்தாலும், ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகிறோம். வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது வெற்றி.

சாமானியக் குடும்பத்தில் உள்ள கடைசி பெண் குழந்தை, கடைசி மனிதர் வரை அரசின் வாய்ப்புகளும் வசதியும் கிடைக்க வேண்டும்.தேசத்துக்காக ஏராளமானவற்றை செய்து இருக்கிறோம். ஆனால், இன்னும் அதிகமான முயற்சிகள் செய்ய வேண்டும், வேகமாக, சிறப்பாகச் செய்ய வேண்டும். அதனால்தான் 2022ம் ஆண்டான நாட்டின் 75-வது சுதந்திரத்தினத்தை சிறப்பானதாகக் கருதுகிறோம்.

நாட்டுக்கு மிகச் செழுமையான, உயர்ந்த வளர்ச்சியிலான பொருளாதாரம் அவசியம். கல்வியறிவு பெற்ற, நியாயமான சிந்தனைகள் உடைய சமூகம், மகாத்மா காந்தியும், பா.ஜனதா சிந்தாந்தவாதி தீனதயாள் உபாத்யாயா கனவு கண்ட சமத்துவ சமூகத்தை உருவாக்க வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.