Asianet News TamilAsianet News Tamil

Bomb Blast : ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு.. கைதான 2 முக்கிய குற்றவாளிகள் - இன்று பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்!

Rameshwaram Cafe Bomb Blast : பெங்களுருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் குண்டு ஒன்று வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 2 முக்கிய குற்றவாளிகள் நேற்று மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டனர்.

Rameshwaram Cafe Blast 2 main accused brought to bengaluru today facing court ans
Author
First Published Apr 13, 2024, 11:24 AM IST

மேற்கு வங்கத்தில் நேற்று கைது செய்யப்பட்ட பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள், இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த இருவரும் நேற்று மாலை பெங்களூரு கொண்டுவரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் சம்மந்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகளான அத்புல் மதீன் அகமது தாஹா மற்றும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் ஆகியோர், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மூலம் கைது நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருப்பிடம் குறித்து கிடைத்த ரகசிய தகவளின் மூலம் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப கொடுத்தாலும் மீனவர்கள் பிரச்சனை தீராது - இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் முழுவதும் 18 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்திய பிறகு, கொல்கத்தாவில் இருந்து 180 கிமீ தொலைவில் உள்ள காந்தி அல்லது காண்டாய் என்ற சிறிய நகரத்தில் ஷாஸேப் மற்றும் தாஹா கண்டுபிடிக்கப்பட்டனர். நேற்று காலை அவர்கள் கைதான நிலையில், நேற்று மாலை அவர்கள் பெங்களூரு கொண்டுவரப்பட்டனர். 

குற்றம் சாட்டப்பட்ட அத்புல் மாதீன் அகமது தாஹா மற்றும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் ஆகியோர் வங்காளத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொல்கத்தாவில் உள்ள நீதிமன்றம், இருவரையும் 3 நாள் காவலில் வைக்க நேற்று அனுமதி அளித்து, அவர்களை பெங்களூருக்கு அழைத்துச் செல்ல என்ஐஏ அனுமதித்தது.

பெங்களூரு ஓட்டலில் கடந்த மார்ச் 1-ம் தேதி நடந்த வெடிவிபத்தில் 10 பேர் காயமடைந்ததை அடுத்து அந்த இருவரும் தப்பி ஓடிவிட்டனர். மார்ச் 3 ஆம் தேதி விசாரணையை என்ஐஏ ஏற்றுக்கொண்டது, குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரையும் கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களுக்கு 10 லட்சம் பரிசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

MEA : மறு அறிவிப்பு வரும் வரை ஈரான், இஸ்ரேல் செல்வதை தவிருங்கள்.. இந்தியர்களுக்கு MEA வெளியிட்ட அறிக்கை!

Follow Us:
Download App:
  • android
  • ios