மகராஷ்டிராவுக்கு புதிய ஆளுநராக ரமேஷ் பயாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, பகத்சிங் கோஷ்யாரி கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார்.

மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த பகத்சிங் கோஷ்யாரி பதவி விலகியதைத் தொடர்ந்து ரமேஷ் பயாஸ் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர ஆளுநராக பதவியேற்றுள்ள ரமேஷ் பயாஸ் ஏற்கெனவே ஜார்கண்ட் கவர்னராக இருந்தவர். அவர் மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டிருப்பதால் ஜார்கண்ட் மாநிலத்துக்கு புதிய ஆளுநராக தமிழக பாஜகவைச் சேர்ந்த சி. பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பகத்சிங் கோஷ்யாரி திடீரென மகராஷ்டிரா ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தனது பதவி விலகல் முடிவை பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.

C. P. Radhakrishnan: ஜார்கண்ட் மாநில ஆளுநராகிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்

உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதல்வராக இருந்தபோது இவருக்கும் மாநில அரசுக்கும் மோதல் போக்கு நீடித்தது. பின்னர் எம்எல்ஏக்கள் ஆதரவை இழந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். தனது பதவிக்காலத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தும் விவாதத்தை உருவாக்கியவர் கோஷ்யாரி. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு நிகராக ஒப்பிட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. கோஷ்யாரி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்நிலையில், இப்போது ராஜினாமா செய்துள்ள பகத் சிங் கோஷ்யாரி அரசியல் பொறுப்புகளில் ஓய்வு பெற்று எழுத்து, வாசிப்பு ஆகியவற்றில் எஞ்சிய காலத்தை செலவிட உள்ளதாகக் கூறியிருக்கிறார். இதேபோல லடாக் யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக இருந்த ராதா கிருஷ்ணன் மாத்தூர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

பீகார், அசாம், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், சிக்கிம், மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்திருக்கிறார்.

பெங்களூருவில் ஏரோ இந்தியா 2023 கண்காட்சி.. தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி - என்னவெல்லாம் ஸ்பெஷல் தெரியுமா.?