அகமதாபாத்தில் இருந்து அயோத்தி புறப்பட்ட முதல் விமானம்.. ராமர், அனுமன் வேடமிட்டு பறக்கும் பயணிகள்..
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரான அயோத்திக்கு பக்தர்கள் செல்ல துவங்கியுள்ளனர்.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரான அயோத்திக்கு பக்தர்கள் செல்ல துவங்கியுள்ளனர். அந்த வகையில் இன்று அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு முதல் விமானம் புறப்பட்டது. பக்தர்களின் உற்சாகக் கொண்டாட்டம் தொடர்பான வீடியோ இணையயத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அகமதாபாத் விமான நிலையத்தில் ராமர், லட்சுமணன், சீதை மற்றும் அனுமன் போன்ற உடையணிந்த பக்தர்கள் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பிற பயணிகளுடன் கொண்டாடுவதை இந்த காட்சிகளில் பார்க்க முடிகிறது.
இதற்கிடையில், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் வி.கே. சிங் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் அகமதாபாத் மற்றும் அயோத்தி இடையே முதல் மூன்று வார விமானங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அயோத்தி ராமர் கோயில் திறப்புவிழா.. பாஜக ஆளும் மாநிலங்களில் மது விற்பனைக்கு தடை.. முழு விவரம் உள்ளே..
இதை தொடர்ந்து பேசிய ஜோதிராதித்ய சிந்தியா , "2014-ல் உத்தரபிரதேசத்தில் 6 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன, இப்போது மாநிலத்தில் அயோத்தி விமான நிலையம் உட்பட 10 விமான நிலையங்கள் உள்ளன. அடுத்த ஆண்டுக்குள் உ.பி.யில் மேலும் 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும். அசம்கர், அலிகார், மொராதாபாத், ஷ்ரவஸ்தி மற்றும் சித்ரகூடில் தலா ஒரு விமான நிலையம். அடுத்த மாதம் திறக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் ஜெவாரில் சர்வதேச அளவிலான விமான நிலையம் தயாராகிவிடும்.
அயோத்தி மற்றும் டெல்லி இடையே இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் இயக்கப்படும் முதல் விமானத்தை டிசம்பர் 30 ஆம் தேதி தொடங்கினோம். இன்று நாங்கள் அயோத்தியை அகமதாபாத்துடன் இணைக்கப் போகிறோம்" என்று தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்
அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 அன்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் கோயில் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவிற்கான வேத சடங்குகள் ஜனவரி 16 அன்று தொடங்கு உள்ளது. வாரணாசியைச் சேர்ந்த லக்ஷ்மி காந்த் தீட்சித், ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக விழாவின் முக்கிய சடங்குகளைச் செய்ய் உள்ளார். ஜனவரி 14 முதல் ஜனவரி 22 வரை அயோத்தியில் அமிர்த மஹோத்சவ் கொண்டாடப்படும். பிரமாண்ட கோவிலில் ராமர் சிலை நிறுவும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22-ம் தேதி பங்கேற்க உள்ளார்.
இருப்பினும், அயோத்தியில் ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ள நிலையில், பக்தர்கள் ராமர் கோயிலை தரிசனம் செய்ய முடியாது என்று லக்னோ கூடுதல் காவல்துறை இயக்குநர் பியூஷ் மோர்டியா நேற்று தெரிவித்தார். ராம்ஜென்ம பூமி அறக்கட்டை சார்பில் அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே விழாவில் பங்கேற்க முடியும் என்றும் அவர் கூறினார்.
ஜனவரி 22 ஆம் தேதி திட்டமிடப்பட்ட ராமர் கோவில் திறப்பு விழாவிற்குத் தயாராகும் வகையில், யோகி ஆதித்யநாத் அரசாங்கம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாரிகளை அயோத்திக்கு அனுப்பியுள்ளது, இது பிரமாண்ட நிகழ்வுக்கான தற்போதைய ஏற்பாடுகளை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.