Ram Rahim foster daughter arrested
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ராம் ரஹிம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனி பிரீத்தை இன்று போலீசார் கைது செய்தனர்.
தேரா சச்சா சவுதா என்ற சமூக நல - ஆன்மீக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம், பாலியல் தொடர்பான சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு, பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ராம் ரஹிம் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் குர்மித் ராம் ரஹிம் சிங்கிற்கு 20 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் சுமார் 41 பேர் பலியானார்கள். 250-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மீடியாக்கள் தாக்கப்பட்டனர்.
இந்த வன்முறை சம்பவங்களுக்கு பின்புலமாக குர்மீத் ராம் ரஹிம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இன்சான் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஹரியானா மாநில போலீசார் அவருக்கு லுக வுட் நோட்டீஸ் வழங்கினர். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த வந்த குர்மீத் ராம் ரஹிம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனி பிரீத்தை இன்று ஹரியானா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
