ram nath kovind the president of india
நாட்டின் 14 வது குடியரசுத்தலைவராக பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த குடியரசு தலைவருக்கான வாக்குப்பதிவு கடந்த 17 ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற்றது.
14-வது குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவில் 99 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிறகு, வாக்கு சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதைதொடர்ந்து காலை சுமார் 11 மணி முதல் குடியரசு தலைவருக்கான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கின.
தற்போது கடைசி கட்ட வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவுற்ற நிலையில், ராம்நாத் கோவிந்த் 7,02,44 வாக்குகளையும், எதிர்கட்சிகளின் மீராக்குமார் 3,67,330 வாக்குகளையும் பெற்றனர்.
இதையடுத்து அதிக வாக்குகள் பெற்று நாட்டின் 14 ஆவது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
