அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட இடத்தில் 5 அடி உயர சிவன்  சிலை, சிற்ப தூண்கள், பத்ம சக்கரம் பொறித்த கல் தளங்கள் உட்பட பபழங்கால சிறபங்கள் கிடைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக 'ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை'யை உருவாக்கி ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா முடிந்துள்ளது. ஊரடங்கு காரணமாக, கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்வுகளால் கடந்த  11ம் தேதி முதல் மீண்டும் அங்கு கட்டுமான பணிக நடைபெற்று வருகிறது. அஸ்திவாரமிடுவதற்காக பூமியை தோண்டிய போது அடியில் 5 அடி உயர சிவலிங்கம், சிற்ப தூண்கள், பழங்கால சிலைகள், பத்ம சக்கரம் உடைந்த விக்ரகங்கள், சிற்பங்கள் செதுக்கப்பட்ட துாண்கள் உள்ளிட்ட பழங்கால பொக்கிஷங்கள் கிடைத்தன. 

இது ராம பக்தர்களை மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. இதுகுறித்து கோயில் நிர்வாக குழுவினர் கூறுகையில், ‘’கோயில் கட்டுவதற்காக தோண்டியபோது சிவலிங்கம், சிற்பத்துாண்கள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாபர் மசூதி கட்டுவதற்கு முன், அங்கு கோவில் இருந்ததற்கான ஆதாரங்களை உறுதிப்படுத்தி இருக்கின்றன. ஆக ராமர் கோயில் அங்கு இருந்ததற்கு இந்த சிற்பங்களே சாட்சி’’ எனத் தெரிவிக்கின்றனர். 

ராமர் கோவில் கட்டுமான தளத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் கோவிலில் இல்லை. இந்திய தொல்லியல் ஆய்வு மையம் இந்த பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று முஸ்லிம்கள் தரப்பினர் கூறியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய சன்னி வக்ஃப் வாரிய வழக்கறிஞர் ஜாபர்யாப் ஜிலானி, 13’ஆம் நூற்றாண்டில் ஒரு கோயில் இருந்ததை இந்திய தொல்லியல் ஆய்வு மைய சான்றுகள் நிரூபிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. இது பீகார், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப்பிரதேச தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான ஒரு தந்திரம். ராமர் கோவிலுக்கும், எந்த தொடர்பும் இல்லை. பீஹார் தேர்தலுக்காக, பா.ஜ., நடத்தும் நாடகம் தான் இது’’எனக் குற்றம்சாட்டி உள்ளார்.