வஞ்சக அரசியலை மக்கள் தோற்கடித்துள்ளனர்.. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடி உரை..

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவையில் உரையாற்றி வரும் பிரதமர் மோடி, மக்கள் வஞ்சக அரசியலையும், பொய் பிரச்சாரத்தையும் தோற்கடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

Rajya Sabha Session : People defeat politics of deceit, propaganda says Pm Modi in Rajya Sabha Rya

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் பதிலுரை ஆற்றி வருகிறார். அப்போது பேசிய அவர் “ தேசிய ஜனநாயக கூட்டணியை நம்பி, மக்கள் 3வது முறையாக வாய்ப்பளித்துள்ளனர். 60 ஆண்டுகளுக்கு பிறகு 3-வது முறையாக நமது அரசு தொடர்ந்து ஆட்சியமைத்துள்ளது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கின்றனர். தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை சிலர் ஏற்க மறுக்கின்றனர்.

காங்கிரஸில் உள்ள எனது நண்பர்களுக்கு நன்றி. இதை 1/3 வது அரசாங்கம் என்று. அவர்கள் சொல்வது சரிதான். நாங்கள் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்துள்ளோம், இன்னும் 20 ஆண்டுகள் ஆட்சி செய்வோம். அது நடக்கும் என்று நம்புகிறேன்.

நீதி வேண்டும்! மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள்.. பதில் அளித்த பிரதமர் மோடி.. என்ன பேசினார்?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பின் காரணமாக நான் இங்கு வந்துள்ளேன். எந்த அரசாக இருந்தாலும் நமது அரசியலமைப்பு கலங்கரை விளக்கம் போல் உதவும். இந்தியாவின் அரசமைப்பை எப்போது புனிதமாக கருதுபவன் நான். அரசியல் சாசனமே எங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. அரசசமைப்பின் நகலை கையில் வைத்து இங்கும் அங்கும் குதிப்பவர்கள் முன்பு அதை எதிர்த்தார்கள். குடியரசு தினம் இருக்கும் போது, தனியாக அரசியல் சாசன தினம் எதற்கு என்று எதிர்க்கட்சிகள் கேட்டனர்.” என்று தெரிவித்தார். அப்போது பிரதமரின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்க்கட்சியின் கடும் அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடி தொடர்ந்து உரையாற்றி வருகிறார். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் பத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு சென்றுள்ளது. கொரோனா உள்ளிட்ட பல சவால்களை கடந்து பொருளாதாரம் வளர்ந்துள்ளது. சிறு நகரங்கள் கூட வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன.

மக்களவை.. எதிர்க்கட்சிகளின் மோசமான நடவடிக்கை.. அவையின் டிவி கவரேஜ் விதிகளை மாற்ற வேண்டும்! எழுந்த கோரிக்கை!

கடந்த 10 ஆண்டுகள் அரசு வழங்கியது வெறும் சிற்றுண்டி தான்,, மெயின் உணவே இனிமே வர உள்ளது. இந்த தேர்தலில் இந்த நாட்டு மக்களின் புத்திசாலித்தனம் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர்கள் பொய் பிரச்சாரத்தை தோற்கடித்தனர். அவர்கள் செயல்திறனுக்கு முன்னுரிமை அளித்தனர். அவர்கள் வஞ்சக அரசியலை நிராகரித்து, நம்பிக்கை அரசியலுக்கு வெற்றியை வழங்கி உள்ளனர்." என்று கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios