போபால் சிறையிலிருந்து தப்பி சென்ற 8 சிமி பயங்கரவாதிகள் குறித்து விரிவான அறிக்கை சமர்பிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் சிறையில் இன்று அதிகாலை காவலுக்கு இருந்த சிறைக் காவலரை 8 சிமி பயங்கரவாதிகள் கொலைசெய்துள்ளனர்.

இதையடுத்து அந்த 8 சிமி பயங்கரவாதிகளும் சிறையிலிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை சமர்பிக்க வேண்டும் என மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
