’போர் மீது விருப்பமில்லை, ஆனால் தீவிரவாதத்தின் மீது தீவைப்பதைத் தவிர வேறு வழியில்லை. 

ஆகாய வீரர்களே, அசகாய சூரர்களே, அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்’ என்று தனது ட்விட்டர் பதிவில் கவிஞர் வைரமுத்து இந்திய ராணுவத்துக்கு ராயல் சல்யூட் அடித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலில் 49 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. விதிமுறைகளை இந்திய விமானப்படை மீறியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று காலை முதல் புலம்பத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் அதிரடி சம்பவத்தை இந்திய ராணுவம் செய்திருப்பது உறுதியாகியுள்ளது. 

இந்திய ராணுவத்தின் இத்துணிச்சலான செயலுக்கு நாடெங்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வரும் நிலையில் கமல், ரஜினி, வைரமுத்து ஆகியோரும் இந்திய ராணுவத்தின் செயலை மெச்சியுள்ளனர். ’பாக் தீவிரவாத முகாம்களை அழித்தொழித்துவிட்டு பத்திரமாக திரும்பியிருக்கும் ராணுவ வீர்களை நினைத்து பெருமைகொள்கிறோம். அவர்களுக்கு எங்களது ராயல் சல்யூட்’ என்று கமலும் ‘வீரமான இந்தியா’ என்று ரஜினியும் ட்விட் செய்ய, கவிஞர் வைரமுத்து வழக்கம்போல் தனது கவிதை நடையில்,...’போர் மீது விருப்பமில்லை, ஆனால் தீவிரவாதத்தின் மீது தீவைப்பதைத் தவிர வேறு வழியில்லை. 

ஆகாய வீரர்களே, அசகாய சூரர்களே, அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்’ என்று பகிர்ந்திருக்கிறார்.