ஆதார் அனுமதி செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பை பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றுள்ளார்.

ஆதார் தொடர்பான தீர்ப்பின் மூலம் பொதுமக்களின் பணம், ஊழல் மூலம் கொள்ளையடிக்கப்படுவதையும், வீணாக்கப்படுவதையும் தடுத்து நிறுத்தும். இதனால், இதை நரேந்திர மோடியின் அரசு உறுதி செய்துள்ளது என ராஜீவ் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் உரிமைகள், இந்த தீர்ப்பின் மூலாம் பாதுகாக்கப்படும் என்றும் அரசின் நடைமுறைகள், வெளிப்படையாக இருக்கும் என்றும் ராஜீவ் சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இன்று ஆதார் அட்டை தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நான் முழுமையாக வரவேற்கிறேன். 

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது, ஏழை - எளிய மற்றும் நடுத்த மக்களுக்கு வழங்கப்பட்ட திட்டங்களில் மானிய தொகையில் ஏற்பட்ட ஊழல் இதன் மூலம் கலையப்பட்டுள்ளது. மேலும் கோடானகோடி ஏழை எளிய மக்கள், அரசு திட்டங்களின் பலன்களை நீண்ட காலத்துக்கு அனுபவிக்க முடியும். பிரதமர் நரேந்திர மோடி அரசு இது தொடர்பாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சின்போது, சட்டத்துக்கு புறம்பாக செலவு செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய், முறையாக ஏழை எளிய மக்களை சென்றடையவில்லை. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அரசு எடுத்த முறையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள் போன்றவை காரணமாக ஆதார் அட்டை மூலம், ஏழை எளிய மக்களுக்கு உரிய மானியம் அவர்களது கணக்கில் செலுத்தப்படும்.

இந்த ஆதார் அட்டை திட்டம் என்பது முதன்முதலாக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் எண்ணத்தில் உருவாகி அது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் ஆதார் என பெயரிடப்பட்டது. இன்று, உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பின் அடிப்படையில் பார்க்கும்போது, காங்கிரஸ் அரசு செலவு செய்த பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய், முறையாக செலவிடப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளது.

அரசு வழங்கும் மானியத்தில் கடந்த 40 - 50 ஆண்டுகளாக மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. வாஜ்பாய் அரசு ஆட்சி செய்யும் அந்த காலகட்டத்தை தவிர கிட்டத்தட்ட 70 ஆண்டுகள், காங்கிரஸ் அரசு இதில் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. வாஜ்பாயின் அறிவுப்பூர்வமான இந்த ஆதார் திட்டம், அதனை முறியடித்துள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, பொதுமக்களின் பணம், ஊழல் மற்றும் வீணடிக்காமல் நேரடியாக ஏழைகளுக்கு சென்றடையும். மேலும், முறைகேடுகள் முற்றிலும் அகற்றப்படும். UIDAI சிஸ்டம் மற்றும் வெளிப்படையான கணக்கு வழக்குகள் இதில் பின்பற்றப்படுவதால், சரியான அளவில் மக்களை சென்றடைகிறது. பிரதமர் நரேந்திர மோடி அரசு ஊழலுக்கு எதிராக நடத்தும் இந்த ஆதார் முறை நடுத்தர மக்களையும் சென்றடையும். 

உச்சநீதிமன்றம், ஆதார் அட்டை மூலம் தனிப்பட்ட ஒருவரின் தகவல்கள் பாதுகாக்கப்படும் என்பதை உறுதி செய்துள்ளது. நரேந்திர மோடியின் அரசு, தனி மனித விவரங்களை பாதுகாப்பதில், விழிப்புணர்வுடன் செயல்படும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. எனவே, ஆதார் அட்டை தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை நான் வரவேற்கிறேன். இது இந்திய ஜனநாயகத்தின் ஒரு மிகப்பெரிய தீர்ப்பாகும் என்று எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் அதில் தெரிவித்துள்ளார்.