தெலுங்கானா மாநிலத்தில் துபாக் சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் எம்.ரகுநந்தன் ராவ் 62,772 வாக்குகள் பெற்று, 61,302 வாக்குகள் பெற்ற ஆளும் டி.ஆர்.எஸ் கட்சி வேட்பாளர் சோலிபேட்டா சுஜாதாவை 1,470 வாக்குகள் வித்தியாசத்தில் ரகுநந்தன் வெற்றி பெற்றார்.

பாஜகவை வீழ்த்த தெலுங்கானாவில் ஆளும் டி.ஆர்.எஸ் அரசு, பாஜகவிற்கு ஏகப்பட்ட குடைச்சல் கொடுத்தது. பாஜக வேட்பாளர் வீட்டில் ரெய்டு, கைது என குடைச்சல் கொடுத்தது சந்திரசேகர் ராவ் அரசு. ஆனால் இந்த தடைகள், மிரட்டல்கள் எல்லாவற்றையும் மீறி, மக்கள் பாஜகவிற்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று பாஜக ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

அதேபோல பாஜக வேட்பாளர் ரகுநந்தன் வெற்றி பெற, பாஜகவிற்கு ஆதரவளித்த துபாக் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ராஜீவ் சந்திரசேகர், வெற்றி பெற்ற ரகுநந்தனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் ஆளும் டி.ஆர்.எஸ் அரசின் குடைச்சல்களையும் மீறி, பாஜக வெற்றி பெற உழைத்த கட்சியினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் ராஜீவ் சந்திரசேகர்.