ராஜஸ்தானில் பேருந்தும் - லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ராஜஸ்தானில் பேருந்தும் - லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டம் ஸ்ரீ துங்கர்கர் அருகே தேசிய நெடுஞ்சாலை இன்று காலை 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, பின்னால் வேகமாக வந்த லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் இரண்டு வாகனங்களும் அப்பளம் போல் நொறுங்கின. 

இந்த விபத்தில் 14 பயணிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உடனே படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இந்த கோர விபத்தால் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.