ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று அதிகாலை நான்கு மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. நில அதிர்வுகளை பதிவு செய்யும் தேசிய ஆய்வு மையம் இதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. சுமார் 30 நிமிடங்களுக்குள் மூன்று முறை திரும்ப திரும்ப நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கம் உணரப்பட்ட உடன் மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். 

இதுவரை இந்த நிலநடுக்கத்திற்கு மக்கள் பாதிப்பு, பொருள் சேதாரம் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் இல்லை. ஜெய்ப்பூரில் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுமார் 4.4 ரிக்டர் அளவில் இருந்தது. இரண்டாவது ஏற்பட்ட நிலநடுக்கம் 3.1 ரிக்டர் அளவில் 4.22 மணிக்கு ஏற்பட்டது. மூன்றாவது முறை ஏற்பட்ட நிலநடுக்கம் 3.4 ரிக்டர் அளவில் 4.25 மணிக்கு ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Scroll to load tweet…
Scroll to load tweet…

அச்சத்தில் வீடை விட்டு வெளியேறிய மக்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியாவும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் தானே என்று கேட்டுள்ளார்.

Scroll to load tweet…