டெல்லியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

டெல்லியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இன்று அதிகாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக டெல்லியின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. மோசமான வானிலை காரணமாக டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. பல விமான நிறுவனங்கள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் பயணிகளின் புதுப்பிக்கப்பட்ட விமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இதேபோல் டெல்லி விமான நிலையம் தனது டிவிட்டர் பக்கத்தில், மோசமான வானிலை காரணமாக, டெல்லி விமான நிலையத்தில் விமானப் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Scroll to load tweet…

விமானங்கள் குறித்த தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பயணிகளிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். ஸ்பைஸ்ஜெட் தனது டிவீட்டில், டெல்லியின் மோசமான வானிலை விமான நிலையத்திற்கு புறப்படுவதையும் வருகையையும் பாதிக்கலாம் என்றும் பயணிகள் தங்கள் விமானத்தின் நிலையை சரிபார்க்குமாறும் கேட்டுக் கொண்டது. இதனிடையே அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Scroll to load tweet…

முந்தைய ட்வீட்டில், இடியுடன் கூடிய மழையால் பாதிக்கப்படக்கூடிய கட்டமைப்புகள் மற்றும் குட்சா வீடுகள் சேதமடையக்கூடும் என்றும், போக்குவரத்து இடையூறுகள் ஏற்படக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில், இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், மணிக்கு 60-90 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், அடுத்த இரண்டு மணி நேரத்தில் டெல்லி மற்றும் என்சிஆர் முழுவதிலும் அதை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் பலத்த காற்று மற்றும் கனமழையால் டெல்லியின் சில பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதை அடுத்து மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், பயணத்தைத் தவிர்க்கவும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Scroll to load tweet…