கர்நாடக மாநிலம், உத்தர கன்னடா, தட்சின கன்னடாவில் பெய்துவரும கனமழையால் நிலச்சரிவில் சிக்கி 2 சிறுமிகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், உத்தர கன்னடா, தட்சின கன்னடாவில் பெய்துவரும கனமழையால் நிலச்சரிவில் சிக்கி 2 சிறுமிகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பருவமழை தீவிரமைடந்துள்ளது. வரும் 4ம்தேதிவரை கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதில் உத்தர கன்னடா, தட்சின கன்னடாவில் கடந்த ஞாயிறு முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது.

ஆந்திரப் பிரசேதம் ரசாயன வாயு கசிவு:100 தொழிலாளர்கள் வரை மருத்துவமனையில் அனுமதி

இதில், உத்தரக் கன்னடா மாவட்டம், பக்தால் தாலுகாவில் உள்ள முத்தாலி கிராமத்தில் மழையால் மலைப்பகுதி சரிந்து குடியிருப்பு மீது விழுந்ததில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 4 பேர் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். 

தட்சின கன்னாடாவில் மலையிலிருந்த மண் சரிந்து விழுந்ததில் சகோதரிகள் இருவரும் கைகளைப்ப பிடித்தவாரே உயிரிழந்தனர். தட்சின கன்னடாவில் உள்ள சுப்ரமண்யாவில் இந்த சம்பவம் நடந்தது.

சுப்ரமண்யா பகுதியைச் சேர்ந்தவர் சுமாதார். இவரின் இருமகள்கள் ஸ்ருதி(வயது11), அவரின் சகோதரி ஞானஸ்ரீ(வயது). திங்கள்கிழமை பேய் மழை பெய்தது. அப்போது, வீட்டின் முற்றத்தில் ஸ்ருதி, ஞானஸ்ரீ இருவரும் படித்துக்கொண்டிருந்தனர். திடீரென மிகப்பெரிய சத்தம் கேட்டதும் இருவரும் வீட்டுக்குள் ஓடி வந்தனர். 

மாணவர்களே அலர்ட்!! கல்லூரிகளில் பாதியில் வெளியேறினால் முழு கட்டணமும் திருப்பி கொடுக்கப்படும்.. புது உத்தரவு

வீட்டின் அருகே இருந்த மலை சரிந்து வீட்டின் கூரையில் விழுந்தது. வீட்டுக்குள் சமைத்துக்கொண்டிருந்த தாய் குழந்தைகள் வெளியே படித்துக் கொண்டிருந்ததால் அவர்களைப் பார்க்க வெளியே ஓடினார்.
ஆனால், ஸ்ருதி, ஞானஸ்ரீ இருவரும் மண், பாறைகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சகோதரிகள் இருவரும் உயிரிழக்கும்போதுகூட, கைகளை இறுகப்படித்தவாரே உயிரிழந்தனர்.
அப்பகுதியில் மரம் வேரோடு சாய்ந்துவிழந்ததால் மீட்பு வாகனங்கள் வரத் தாமதமானது. அதன்பின் மின்தடை, மழை போன்றவற்றால், நீண்டநேரம் நடந்த மீட்புப்பணிக்குப்பின்புதான், இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன எனபோலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

விமானத்தில் மீது கார் மோதி விபத்து… டெல்லி விமான நிலையத்தில் உச்சக்கட்ட பரபரப்பு!!