தென் மேற்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் கேரளாவில் பலத்த மழை பெய்து வந்தது. அதுவும் கடந்த மாதம் அங்கு மழை கொட்டித் தீர்த்தால் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியது. 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமாகின.

தற்போது தான் மழை-வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா கொஞ்சம், கொஞ்சமா மீண்டு வருகிறது. இந்நிலையில்தான் இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக இடுக்கி, வயநாடு, பத்தனம் திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம் பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில்  அடுத்த இரண்டு நாட்களுக்கும்  கேரளாவில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  இந்திய வானிலை ஆய்வு மையம்  எச்சரித்துள்ளது. இது அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்த  பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்கவும், வருவாய் துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்படியும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்  உத்தரவிட்டுள்ளார்..